பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/465

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464

காவல்துறை பற்றி

31-3-97 வரை கைப்பற்றி அழிக்கப்பட்ட கள்ளச்சாராயம் 43 லட்சத்து 17 ஆயிரத்து 625 லிட்டர் என்பதை நான் பெருமையோடு இங்கே கூறிக்கொள்கின்றேன்

சாராய ஊறல்கள் அழிப்பு விவகாரத்தில் 13-5-96 முதல் 31-3-97 வரை கைப்பற்றி அழிக்கப்பட்ட கள்ளச்சாராய ஊறல்கள் 3 கோடியே 59 லட்சத்து 18 ஆயிரத்து 449 லிட்டர் என்பதைப் பெருமிதத்தோடு கூறிக்கொள்கின்றேன்.

சாராவி, ஸ்பிரிட் கழக அரசில் 13-5-96 முதல் 31-3-97 வரை கைப்பற்றி அழிக்கப்பட்ட சாராவி என்ற ஸ்பிரிட் 3 லட்சத்து 61 ஆயிரத்து 426 லிட்டர்.

கள்ளச் சாராயத்தை ஒழிக்கிற சிறப்பு நடவடிக்கையின் அடிப்படையில் 3 நாள் ஒரு தவணையாகவும் 4 நாள் மற்றொரு தவணையாகவும் ஸ்பெஷல் டிரைவ் ஒன்று நடத்தப்படுகிறது.

அந்த வகையில் 13-11-96 முதல் 15-11-96 வரை 3 நாட்கள் தமிழ்நாட்டிலே நடத்தப்பட்ட அந்தச் சிறப்பு கள்ளச் சாராய வேட்டை மற்றும் 14-2-97 முதல் 17-2-97 வரை 4 நாட்கள் நடைபெற்ற அந்தக் கள்ளச் சாராய வேட்டை ஆகியவற்றில் 13 முதல் 15 வரை நடத்தப்பட்ட வேட்டைகளில் 5,746 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. 5,120 நபர்கள் கைது செய்யப்பட்டார்கள். 61 ஆயிரத்து 132 லிட்டர் கள்ளச் சாராயம் கைப்பற்றி அழிக்கப் பட்டிருக்கின்றது. 41 லட்சத்து 93 ஆயிரத்து 25 லிட்டர் சாராய ஊறல்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்டமாக, 14-2-97 முதல் 17-2-97 வரை நடத்தப் பட்ட அந்தச் சிறப்பு வேட்டைகளில் 7,286 வழக்குகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவ்வழக்குகளில் 7,022 நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 58 ஆயிரத்து 125 லிட்டர் கள்ளச் சாராயம் கைப்பற்றி அழிக்கப்பட்டுள்ளது. 7 லட்சத்து 39 ஆயிரத்து 427 லிட்டர் சாராய ஊறல்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டன.

இவ்வளவு அதிகமாகக் கைப்பற்றப்பட்டு இருந்தாலும்கூட அறவே சாராயம் ஒழிந்ததா என்றால் இல்லை. அதனுடைய நெடி இன்னமும் தமிழகத்திலே அடித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதை அறவே ஒழிப்பதற்கான முயற்சிகளில் இந்த அரசு ஈடுபடுவதற்குக்

காவல் துறையும், கள்ளச் சாராயம்