பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/466

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

465

காய்ச்சுகின்றவர்கள் நல்லவர்களாக மாற வேண்டும் என்ற நிலையும், இந்த மாமன்றத்திலே இருக்கின்ற எல்லாக் கட்சிகளினுடைய உறுப்பினர்களும் ஒன்றுபட்டு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ளும் பொழுது யாரும் என்னைத் தவறாகக் கருதிக் கொள்ளக் கூடாது. ஏனென்றால், சில நேரங்களில் நமக்கு வேண்டியவர்கள் இதில் சிக்கிக் கொண்டால் அவர்களை விடுவிக்க வேண்டும் என்கின்ற அந்த நிலையைக் கூட யாரும் எடுக்காமல், “சிக்கிக் கொண்டாயா, சரி, அதுதான் உனக்குச் சரியான ச் தண்டனை” என்கின்ற அளவிற்கு மாமன்றத்தினுடைய உறுப்பினர்கள் இருப்பார்களேயானால், கள்ளச் சாராயத்தை இந்த அரசு கண்டிப்பாக ஒழித்து விட்டது என்ற ஒரு புதிய சரித்திரத்தை நாம் உண்டாக்க முடியும். (மேசையைத் தட்டும் ஒலி).

இந்தக் கலால் சட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்தாத காவல் துறையினர்மீது, கழக ஆட்சியில் ஜூன் 96 முதல் மார்ச் 97 வரை மொத்தம் 705 காவல் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிட்டுக் கூற வேண்டிய முக்கியமான செய்தி என்னவென்றால், கலால் சட்டத்தை தீவிரமாகவும், உண்மையாகவும் செயல்படுத்தாமல் இருந்தமைக்காக 14 காவல் துறையினர்மீது கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டு. அவர்கள் கைது செய்யப் பட்டிருப்பதும் கழக ஆட்சியிலேதான் என்பதை நான் பெருமையோடு கூறிக்கொள்வேன்.

மதுக்

கடைகளில் பார் நடத்துவதைப் பற்றிச் சொன்னார்கள். சொன்னது திரு. ஈஸ்வரன்தான் என்று கருதுகிறேன். இந்த பார் நடத்துவதால் ஏற்படக்கூடிய கஷ்டங்களை இந்த அரசு எண்ணிப் பார்த்து, பார் நடத்தக் கூடாது என்று குறிப்பிடுகிறது. ஆனால் அங்கே சரக்குகளை வாங்கிக் கொண்டு, பக்கத்திலே உட்கார்ந்து குடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள் என்றெல்லாம் சொன்னார்கள்.

நம்முடைய எதிர்க்கட்சித் தலைவரேகூட போனமுறை பேசும்பொழுது சொன்னார்கள். பார் நடத்தாத காரணத்தால், நடத்திக் கொள் என்று அவர்களுக்கு உரிமை கொடுத்து, மறை முகமாக உரிமை கொடுத்து, ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும்

16 - க.ச.உ. (கா.து)