பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/467

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466

காவல்துறை பற்றி

உள்ள போலீஸ் அதிகாரிகள் 5 ஆயிரம், 6 ஆயிரம் என்று 6 சம்பாதிக்கிறார்கள் என்ற செய்தியைக்கூட அவர்கள் இங்கே எடுத்துச் சொன்னார்கள்.

ஆனால், இன்றைக்கு நம்மால் முடிந்த அளவிற்கு மதுக் கடைகளில் பார் நடத்தியவர்கள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று பார்த்தால் 1-6-96 முதல் 31-3-97 வரையில் மதுக் கடையில் பார் நடத்தியதற்காகப் போடப்பட்ட வழக்குகள் 1,245. மதுக்கடைகளின் உரிமங்களை ரத்து செய்ய அனுப்பிய அறிக்கைகள் 640. மதுக்கடைகளிலே சில்லறை விற்பனை, போலி மது விற்பனை மற்றும் குறிப்பிட்ட நேரத்திற்கு மேலாக விற்பனை செய்தது குறித்து போடப்பட்ட வழக்குகள் 3,240 ஆகும்.

கள்ளச் சாராயத்தை முழுவதும் ஒழித்துவிட்டதாகப் பெருமையடித்துக் கொள்கிற கிராமங்கள், தமிழ்நாட்டிலே 1,500 கிராமங்கள் என்பதை நான் எடுத்துக்கூற விரும்புகின்றேன். இருக்கின்ற கிராமங்கள், 58 ஆயிரம், 60 ஆயிரம் கிராமங்கள் இருக்கின்றன. அவற்றிலே 1,500 கிராமங்களிலேதான் கள்ளச் சாராயம் இன்றைக்கு அறவே ஒழிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கிராமங்களுக்குச் சென்று, யாத்திரைக்குச் செல்வது போலச் சென்று புனித யாத்திரை போலச் செய்து, அவைகளைத் தரிசித்தால்கூட நன்றாக இருக்குமென்று, மதுவிலக்கிலே தீவிர எண்ணம் கொண்டவர்களுக்கு நிச்சயமாக ஒரு மனப்பான்மை ஏற்படும். 1,500 என்பது போதுமானதல்ல. இந்த 1,500-ஐ 15 ஆயிரமாக ஆக்க, எல்லா கிராமங்களிலுமே இன்றைக்கு கள்ளச் சாராயம் இல்லை யென்ற நிலையை உருவாக்க, அனைவரும் ஒன்றுபட்டு ஒத்துழைக்க வேண்டுமென்ற வேண்டுகோளை இந்த மாமன்றத்திலே நான் வைக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

துப்பாக்கிச் சூடுகளைப் பொறுத்தவரையில் இங்கே பேசினார்கள். 1995-ஆம் ஆண்டு துப்பாக்கிப் பிரயோகம் 38 முறை நடைபெற்றிருக்கிறது. 1996 முதல் இந்த ஆட்சி பொறுப் பேற்கின்றவரையில் 11-5-96 வரையில் 41/2 மாத காலத்தில் 18 இடங்களிலே துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்றது. ஆனால், கழக அரசு பொறுப்பேற்ற பிறகு 13-5-96 முதல் 24-4-97 முடிய, 11/2 மாத காலத்தில் 11 துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்றிருக்கிறது. இதிலே எண்ணிக்கை பெரிதல்ல. அன்றைக்கு அது ஏன் இன்றைக்கு