LL
46
காவல்துறை பற்றி
காவல்
அறிவிக்கின்றன. உதாரணமாக, துறையினர் திறமையாகவும், தூய்மையாகவும் பணியாற்ற அவர்களின் கல்வித்தரம், படி ஆகியவைகள் உயர்த்தப்பட வேண்டும்” என்றும், "போலீஸாருடைய சம்பளத்தை உயர்த்த வேண்டும்" என்றும் "குடியிருப்பு வசதிகளைத் துரிதப்படுத்துதல் வேண்டும்” என்றும் கடமையாற்றும் வசதிக்காக, ஒவ்வொரு சர்க்கில் இன்ஸ்பெக்டருக்கும் ஒரு ஜீப் கார் வழங்கவேண்டும்" என்றும், "போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு உடுப்பு 'அலவன்ஸ்'ஸை அதிகப்படுத்த வேண்டும்" என்றும் உடை, சலவைக்கூலி, சவரக்கூலி, முதலிய படிகளை உயர்த்த வேண்டும்” என்றும், விலைவாசி உயர்வுக் கேற்ப சாப்பாடு படிகளை உயர்த்திட வேண்டும்” என்றும், 'கடமையைச் செய்யும்பொழுது, இழப்புக்கு ஆளாகும் காவலர்க்கு தக்க நிவாரணம் அளிக்க வேண்டும்” என்றும், இத்தகைய வெட்டுப் பிரேரணைகள்தான், பெரும்பாலும் எதிர்க் கட்சி உறுப்பினர்களால் தரப்பட்டு இருக்கின்றன. இதிலிருந்தே, போலீஸ் இலாகாவில் பணி புரிகின்ற நண்பர்கள் மீது எதிர்க் கட்சியில் இருக்கின்றவர்களுக்குப் பகை உணர்ச்சி கிடையாது என்பது விளங்கும். இலாகாவில் ஒரு சிலர் தவறுக்கு ஆளாகின்றார்கள். அல்லது தவறு செய்யத் தூண்டப் படுகின்றார்கள். அதிலே தவிர்க்க முடியாத அளவில் சிக்கிக் கொள்ளுகிறார்கள். குற்றம் குறைகள் இருப்பதைச் சொல்லுகிறோம் என்றால், அது எங்களுக்கு மேல், ஆளும் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் அதிகமாகப் பயன்படும் என்றுதான் எடுத்துச் சொல்லுகிறோம்.
உள்துறை அமைச்சர் கொடுத்திருக்கும் அறிக்கையில், 1964-ம் ஆண்டு வழக்குகளின் எண்ணிக்கை 48,947. அதுவே 1965-ல் 49,151 என்றும், 117தான் கூடுதலாக இருப்பதால், அது குறைந்த கூடுதலே என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். மற்ற மானியங்களைப் போல அல்ல இது. விவசாயம் போன்ற வேறு மானியங்களில் 1964-ம் விளைச்சல் இவ்வளவு, 1965-ல் இவ்வளவு அதிகம் என்று சொல்வது சரியாக இருக்கும். அதேபோல இந்த மானியத்தில் கருதமாட்டார்கள், எதிர்பார்க்கவும் கூடாது. இந்த மானியத்தைப் பொறுத்த வரையில், 1964-ம் ஆண்டு இருந்த குற்றங்களின் எண்ணிக்கையைவிட 1965-ம் ஆண்டு குற்றங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கவேண்டும். குற்றங்கள் குறையக்