470
காவல்துறை பற்றி
பிறகும், மதுவிலக்குச் சட்டங்களை சரியாக அமல்படுத்தாமல், போலியாக லேபிள்களை ஒட்டி மதுபான பாட்டில்களை விற்க மறைமுகமாக உதவியாக இருந்ததற்காகப் புதுவண்ணக் காவல்நிலைய ஆய்வாளர் நேற்று அவர் குறிப்பிட்ட அந்த அதிகாரி - மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனிலே இருக்கிறார். இவர் மீது நடவடிக்கை எடுக்க எந்தவிதமான உள்நோக்கமும் கிடையாது என்பதையும், வழக்கு நடைபெறவிருக்கிறது. அதிலே உண்மை விளங்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அடுத்து, டாக்டர் செல்லக்குமார் சொன்ன மற்றொரு குறைபாடு அல்லது குற்றச்சாட்டு. அவருக்கே பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று யாரும் கருத வேண்டாம். ஏனென்றால், இந்தப் பத்திரிகைகள் எல்லாம் அந்தக் குற்றச்சாட்டுகளைப் பெரிய அளவிலே வெளியிட்டிருக்கின்றன. அவைகள் எல்லாம் அப்படி வெளியிடப்பட வேண்டும், அப்பொழுதுதான் மக்களுக்கு விளக்கம் கொடுப்பதற்கும் வழி இருக்கும், காவலர்களும் தவறு செய்திருந்தால் திருத்திக்கொள்ளவும், ஒரு வேளை அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், நடவடிக்கை எடுக்கவும் ஏதுவாக இருக்கும் என்ற அந்தக் காரணத்தாலே, எடுத்த நடவடிக்கைகளைப் பற்றியும், தரவேண்டிய விளக்கங்களையும் இங்கே நான் தர வேண்டியவனாக இருக்கிறேன். அமைந்தகரையில் நடைபெற்ற நிகழ்ச்சி பற்றி விளக்கமாக அவர் இங்கே குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் பற்றி இதே அவையிலே 24-3-1997 அன்று புரசைத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. ரங்கநாதன் அவர்கள் விரிவாகப் பேசி, ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானமே கொண்டு வந்தார்கள். நான், ஏதோ தவறான தகவல்களைச் சொல்லிவிட்டதாக டாக்டர் செல்லக்குமார் இங்கே குறிப்பிட்டார். அன்றைக்கு நான் பேசும்போதேகூட இங்கே தவறான தகவல்களைத் தந்ததாகச் சொல்கிற டாக்டர் செல்லக் குமாருக்கும் சொல்கின்றேன், அதை உறுப்பினர்களுக்கும் சொல்லிக் கொள்கின்றேன். இதுபோன்ற நிகழ்வுகள் வருகின்ற நேரத்தில், அதிகாரிகளிடமிருந்து வருகின்ற அறிக்கைகளை நான் படிக்கும்போது, இந்த அறிக்கையை நான் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை, இதில் தவறுகள் இருக்கலாம், தகவல் சரியற்றவையாகவும் இருக்கலாம், எனவே