பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/478

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

477

அதைப் போலீஸ் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றதொரு நல்ல உண்மையை, இந்தச் செய்தியை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்முடைய நண்பர் திரு. வெங்கடசாமி அவர்கள் பேசும்போது, போலீஸ் துறையைப் புனரமைப்புச் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். மனித நேயத்தோடு மக்களுடைய குறைபாடுகள் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறினார்கள். அதற்காக வேண்டி, எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இங்கே எடுத்துக் காட்டியதைப் போல, மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி, மாநில மனித உரிமைக் கழகம், மனித உரிமைகள் ஆணையம் ஒன்றை ஏற்படுத்த 20-12-96-லே அரசு ஆணைப் பிறப்பித்துள்ளது என்பதை நீங்கள் அனைவரும் மிக நன்றாக அறிவீர்கள். மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்கள் ஆகியோருக்கான வரம்புகளும், மற்றும் ஏனைய நிபந்தனைகளும் வரையறை செய்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதன்படி, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு. நைனார்சுந்தரம் அவர்களைத் தலைவராகவும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திரு. கே. எஸ். சாமிதுரை, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி திரு. அப்துல்கனி, திரு. ஆர். ரத்தினசாமி, டாக்டர் எம். சுசிலாராஜு ஆகியோரை உறுப்பினர்களாகவும் நியமித்து, அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இனி, இப்படிப்பட்ட மனித உரிமை மீறல் காரியங்கள் எங்கு நடைபெற்றாலும், அவைகளை விசாரித்து, நியாயப்பூர்வமாக, அரசின் தலையீடு எள்முனையளவும் இல்லாமல், அதைப்பற்றிக் கருத்தறிவிக்க, நீதி வழங்க இந்த ஆணையம் செயல்படும் என்ற உறுதியையும் இந்த மாமன்றத்திற்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

திருநெல்வேலி மாவட்டத்திலே, திருச்சிற்றம்பலம் கிராமத்தில் யாரோ ஒருவர் கொலை செய்யப்பட்டுவிட்டார் என்ற வதந்தியின் அடிப்படையில் முருகையன் என்பவர் கொலைக்கு ஆளானார் என்பதை திரு. சந்தானம் அவர்கள் இங்கே குறிப்பிட்டு, அவருடைய குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொணட்ார். அதைப் பற்றிய விவரங்களை நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவரோடு தொடர்பு கொண்டு, கலந்து பேசி,