பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/480

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

479

தண்டனைச் சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கிலே மொத்த எதிரிகள் 26 பேர். இதிலே 17 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 4 பேர் நேராக, நீதிமன்றத்திலே சரண் அடைந்திருக்கிறார்கள். 4-1-1997 அன்று குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. எஃப்.ஐ.ஆருடன் நிற்கவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

குழித்துறையிலே, கடைகளை நாசம் செய்ததைப் பற்றி எதுவும் நடவடிக்கை இல்லை என்று மாண்புமிகு உறுப்பினர் திரு.. மணி அவர்கள் சொன்னார்கள். இந்தக் குற்றத்தினுடைய எண் 823/96-ல் வழக்கு, 436வது இந்திய தண்டனைச் சட்டப்படி, பதிவு செய்யப்பட்டு, 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். குழித்துறைப் பகுதியிலே, கள்ளச் சாராயம் பற்றி திரு. மணி குறிப்பிட்டார்கள். கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், கள்ளச் சாராய வேட்டை நடத்தி, 953/96 மற்றும் 954/96 என்ற இரண்டு வழக்குகளைப் பதிவு செய்து, 4 வாகனங்களைக் கைப்பற்றி, 14 பேரை கைது செய்திருக்கிறார்கள் என்ற செய்தியை அவருக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்

அருமனையிலே, 2 கற்பழிப்பு வழக்குகளைப் பற்றியும் திரு. மணி அவர்கள் கூறினார்கள். இதிலேயும், வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். எஃப்.ஐ.ஆரோடு நிற்கவில்லை.

வள்ளியூரில் கொலை வழக்குப் பற்றி கூறினார்கள். அதிலேயும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டு, குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு, நீதிமன்றத்திலே நடந்து கொண்டிருக்கிறது.

இதற்கு அடுத்துதான் உச்சகட்டம் வரவிருக்கின்றது; பலருடைய கோரிக்கைகள், இங்கே வைக்கப்பட்ட ஆலோசனைகள், இவற்றை பற்றியெல்லாம் இதற்கு முன்பு, கடந்த ஆண்டு சொன்னதைச் செய்தோமா, இல்லையா என்று சொன்னால் தான் சொல்லப் போவதைச் செய்வார்களா, இல்லையா என்ற நம்பிக்கை உங்களுக்கு வரும். எனவே கடந்த ஆண்டில், 26-8-1996 அன்று, நான் இந்த மானியத்திலே பேசியபோது செய்யப்பட்ட அறிவுப்புகள் :