பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/483

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482

காவல்துறை பற்றி

அதாவது, 'நற்பணி' என்றால், 10 ஆண்டுக் காலம், 15 ஆண்டுக் காலம், 20 ஆண்டுக் காலம் நல்ல பெயரோடு, அந்தக் காவல் துறையிலே பணியாற்றுகிற பணியாளர்கள் என்று பொருள்.

1989ஆம் ஆண்டு ஆயுத சேமப் படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் பணியமர்த்தப்பட்ட தகுதிவாய்ந்த 395 உதவி ஆய்வாளர்களில் எஞ்சியுள்ள 85 பேருக்கும் குறிப்பிட்ட பயிற்சி அளிக்கப்பட்டு, சட்டம் ஒழுங்குப் பிரிவுக்கு மாற்றப் படுவார்கள் என்று அன்றைக்கு அறிவித்தேன். ஆயுத சேமப் படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் பணியாற்றி வரும் 85 உதவி ஆய்வாளர்களைப் பயிற்சிக்கு அனுப்புவது தொடர்பாக அக்டோபர் 1996-ல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, அவர்களும் பயிற்சிக்கு அனுப்பப்பட்டுவிட்டார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பயிற்சிக்கு அனுப்பப்பட்டுள்ள அனைத்து நபர்களையும் சட்டம் ஒழுங்கு பிரிவிற்கு மாறுதல் செய்வதற்கு ஏற்ற வண்ணம் பணி விதிகளுக்கான திருத்தங்களும் வெளியிடப்பட்டு விட்டன என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

-

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட காலியாக உள்ள 454 காவல் பணிகள் உடனடியாக நிரப்பப்படும் என்று சொன்னேன். அதை அமல்படுத்த ஆணைப் பிறப்பிக்கப் பட்டுவிட்டது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

1989ஆம் ஆண்டு காவலர் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் பெறாத

-

திரு.

நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும், அடிக்கடி நம்முடைய திரு. சொக்கர் அவர்களும் மற்றும் நம்முடைய ஞானசேகரன் அவர்களும் திரு. சுப்பராயன் அவர்களும், திரு. அப்துல் லத்தீப் அவர்களும், திரு. திருநாவுக்கரசு அவர்களும் எடுத்துச் சொன்ன அந்தக் கருத்தின்படி 1989ஆம் ஆண்டு காவலர் தேர்வில் தேர்ந்தெடுக்கப் பட்டு நியமனம் பெறாத 1609 பேருக்கு அவர்கள் விண்ணப்பித்தால் உரிய விதிகளைத் தளர்த்தி நியமன உத்தரவு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும். (குறுக்கீடு). (ஸ்டாலின் பெயரை விட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள், சேர்த்துக் கொள்ளுங்கள், நீங்கள் சேர்த்துக்கொள்ளுங்கள்.) இந்த 1609

C