பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/484

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

483

பேர்களில் 1070 பேர் குறிப்பிட்ட அதிகாரிகள் முன்னிலையில் தக்க சான்று ஆவணங்களோடு வருகை புரிந்தார்கள். அவர்களுள் 1022 பேர் மருத்துவத் தேர்வு மற்றும் பிற விசாரணைக்குப் பின் காவலர் பதவிக்குத் தகுதியுடையவர்கள் என்று கண்டறியப் பட்டார்கள். இதில் 610 பேருக்குச் சம்பந்தப்பட்ட விதிகளைத் தளர்த்தி அனுமதி உத்தரவு வழங்குவது குறித்து ஆணைகள் வெளியிடப்பட்டுவிட்டன. 412 பேருக்கு விதிவிலக்குத் தேவைப் படவில்லை. 610 பேருக்கு கல்வியிலே விதிவிலக்கு, வயதிலே விதிவிலக்குத் தேவைப்பட்டது. அந்த விதிவிலக்குகளையும் அளித்து 1022 பேருக்கு பணி வழங்கு ஆணைகள் வெளியிடப் பட்டுவிட்டன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

5000 காவலர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் நடப்பாண்டிலும் அடுத்த ஆண்டிலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அன்றைக்குச் சொன்னேன். சீருடைப் பணியாளர்கள் வாரியம் துவங்கிய 1995ஆம் ஆண்டு அந்த ஆட்சியில் 10 ஆயிரம் காவலர்கள் தேர்வு முடித்த பின்னர் இவ்வளவு உயர்ந்த எண்ணிக்கையிலான அவர்களுக்கு ஒரே நேரத்தில் பயிற்சி அளிப்பது தொடர்பாக ஏற்பாடுகள் செய்ய இயலாமையால் இரண்டு பிரிவுகளாகப் பிரித்து அவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கு ஆணைகள் வெளியிடப்பட்டு முதல் பிரிவினர் 16-4-97 முதல் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த 6 மாத காலப் பயிற்சி முடிந்ததும் அடுத்தப் பிரிவினர் பயிற்சிக்கு அனுப்பப்பட வுள்ளார்கள். இத்தகை சூழ்நிலையில் அடுத்தக் கட்டக் காவலர்கள் தேர்வினை நடத்த உசிதமில்லையாதலால் இந்தக் காவலர் தேர்வு வரும் ஆண்டில் நடத்தப்படவுள்ளது. இதனைப்போல 1,100 உதவி ஆய்வாளர்களில் முதல் பிரிவினரான 500 பேர் மார்ச் 1997-ல் பயிற்சி முடித்துள்ளார்கள். எஞ்சியுள்ள 600 பேர் விரைவில் பயிற்சிக்கு அனுப்பப்படவுள்ளார்கள். (மேசையைத் தட்டும் ஒலி).

இந்தச் சூழ்நிலையில் உதவி ஆய்வாளர்கள் பதவிக்கான நேரடித் தேர்வுகளையும் உடனடியாக நடத்த உசிதமில்லை யாதலால் இத்தேர்வு நடப்பாண்டில் நடத்தப்படும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.