பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/486

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

485

தீயணைப்பு நிலையங்கள் 21 துவங்கப்படும் என்று சொன்னேன். 26-11-96-ல் அரசாணை வெளியிடப்பட்டு 21 தீயணைப்பு நிலையங்கள் இயங்கி வருகின்றன. அடுத்து உத்தமர் காந்தி பெயரில் பதக்கம் வழங்குதல். கள்ளச்சாராயம் ஒழித்தல் குறித்து வெகுமதி 10,000 ரூபாய் வழங்கப்படும் என்று சொன்னேன். அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கலைக்கப்படுகிறது என்ற சொன்னேன். அவ்வாறு அரசாணை வெளியிடப்பட்டு விட்டது. இனி புதிய அறிவுப்புகளோடு என்னுடைய உரையை நிறைவு செய்யலாம் என்று இருக்கிறேன். தமிழ்நாட்டில் தற்போது ஆய்வாளர்கள் வரையிலுள்ள காவல் பணியாளர்களின் எண்ணிக்கை 83,825 ஆகும். மேற்படி எண்ணிக்கையில் இதுவரை 25,791 காவல் பணியாளர்களுக்கு மட்டுமே குடியிருப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள பணியாளர்களுக்கு அந்த வசதியில்லை. ஆண்டு ஒன்றுக்கு 1,500 குடியிருப்புகள் வீதம்தான் கட்டப்படுகிறது. இது நம்முடைய இலக்கை நிறைவு செய்யாது என்பதற்காக இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 80 கோடி ரூபாய் செலவில் இனிமேல் 1,500 குடியிருப்புகளுக்குப் பதிலாக 2,500 குடியிருப்புகள் வீதம் காவல் பணியாளர்களுக்கு என்று கட்டித் தரப்படும். அது மாத்திரம் அல்லாமல், தமிழ் நாட்டிலே 98 இடங்களில் உள்ள 2751 காவலர் குடியிருப்புகளில் எல்லா காவல் குடியிருப்புகளுக்கும் ஏறத்தாழ 5 கோடி ரூபாய் செலவில் நவீன கழிப்பிட வசதிகள் செய்து தரப்படும் என்பதைத் தொவித்துக் கொள்கிறேன்.

காவல் நிலையங்களுக்கான கட்டிடங்கள் கட்டுதல், தமிழ்நாட்டில் மொத்தம் 1,323 காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் 891 காவல் நிலையங்கள் அரசு கட்டிடங்களிலும் எஞ்சியுள்ள 432 காவல் நிலையங்கள் வாடகை கட்டிடங்களிலும் இயங்கி வருகின்றன. இந்த ஆண்டு முதற்கட்டமாக மேலும் 79 காவல் நிலையங்களுக்கு, கட்டிடம் கட்ட அனுமதிப்பது என்றும் மூன்று ஆண்டுகளில் கட்டி முடிப்பது என்றும் ரூ. 15 கோடி செலவு ஆகும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.