488
காவல்துறை பற்றி
இசைக்குழு, தமிழ்நாடு காவல்துறை இசைக்குழுவில், இப்போது பேண்ட் மாஸ்டருக்கு ரூ. 50; இனிமேல் ரூ. 100 வழங்கப்படும். உதவி பேண்ட் மாஸ்டருக்கு இப்போது ரூ. 25; இனிமேல் 75 ரூபாயாக சிறப்பு ஊதியம் வழங்கப்படும். தலைமைக் காவலர்/ஹவில்தார்களுக்கு இப்போது 25 ரூபாய்: இனிமேல் 60 ரூபாயாக வழங்கப்படும். காவலர் நாயக்/லான்ஸ் நாயக் இவர்களுக்கு இப்போது 15 ரூபாய் என்பது இனிமேல் 40 ரூபாயாக வழங்கப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கம் பெற்றவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திரப் படி உயர்த்துதல். மாதப்படி இப்போது 20 ரூபாய் என்பது இனிமேல் 40 ரூபாயாக உயர்த்தப்படும். உள்ளூர் தலைமைக் காவலர் மாதப்படி ரூ. 25 என்பது ரூ. 50 ஆகவும், ஆயுதப்படை நாயக் / தலைமைக் காவலர் மாதப்படி ரூ. 25 என்பது ரூ. 50 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.
/
வீரதீரச் செயல்களில் காயமடையும் / மரணமடையும் காவல் துறையினருக்கு வழங்கப்படும் கருணைத் தொகையினை அதிகரிக்க வேண்டுமென்று மிகுந்த கருணையோடு திரு. ரங்கநாதன் அவர்கள் நேற்று நீண்டநேரம் பேசியிருக் கிறார்கள். வீரமரணம் அடைவோருக்கு இதுவரையில் ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இனிமேல் இரண்டு இலட்சம் ரூபாயாக - அவர் 1/2 இலட்சம் ரூபாய்தான் கேட்டார் (மேசையைத் தட்டும் ஒலி) 11/2 இலட்சம் வழங்க வேண்டுமென்று சொன்னார். அது இரண்டு இலட்சமாக வழங்கப்படும்.
ஊம்
செயல்பட முடியாத அளவுக்கு நிரந்தர அடைவோருக்கு இதுவரை வழங்கப்பட்ட ரூ. 20 ஆயிரம் என்பது 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் (மேசையைத் தட்டும் ஒலி). படுகாயம் அடைவோருக்கு இதுவரை வழங்கப்பட்ட ரூ. 5 ஆயிரம் என்பது 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். சாதாரணக் காயம் அடைவோருக்கு இதுவரை வழங்கப்பட்ட ரூ. 3 ஆயிரம் என்பது 5 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி).
காவல்துறையிலே, வான் தந்திப் பிரிவில் பணியாற்றும் நாயக்குகள் பல ஆண்டுகளாக எவ்விதப் பதவி உயர்வும் இல்லாமல்