48
காவல்துறை பற்றி
அப்படிப்பட்டவரை, கொஞ்சம் அலட்சியமாக இருந்து விட்டால் தப்பி ஓடிவிடுவார், பயங்கரமானவர் என்று, கைகளில் விலங்கிட்டு போலீசார் அழைத்துச் சென்ற காட்சியும் ஞாபகத்திற்கு வருகிறது.
பிரிட்டானிய நாட்டில், ஒரு கான்ஸ்டபிளுடைய சம்பளம், என்ன? அண்மையில் ஒரு புத்தகத்தில் பார்க்க நேர்ந்தது. ஆண்டு ஒன்றுக்கு, ஒரு பிரிட்டிஷ் போலீஸ்காரருடைய சம்பளம், 700 பவுன். மாதம் சுமார் 58 பவுன், அதாவது ரூபாய்க் கணக்கில் சொன்னால், ரூ. 758. இது ஒரு போலீஸ் கான்ஸ்டபிளுடைய சம்பளம். மாதம் ஒன்றுக்கு ரூ. 758; அதாவது இங்கே இருக்கும் அசிஸ்டென்ட் இன்ஸ்பெக்டர் ஜெனரலுடைய சம்பளத்திற்கு ஒப்பானது. அவர்களுடைய சம்பளம் கூட ரூ. 740 தான். பிரிட்டன் நாட்டில் இருக்கிற போலீஸ் கான்ஸ்டபிளுக்கு ரூ. 758 என்றால், ஓய்வு பெற்ற போலீசார் ஊதியத்தில் பாதியைப் பென்ஷனாகப் பெறுகிறார்கள். முப்பது ஆண்டு காலம் வேலைசெய்து விட்டு ஓய்வு பெற்றால், மூன்றில் இரண்டு பங்கு ஊதியத்திலிருந்து கணக்கிட்டுத் தரப்படுகிறது.
இங்கே ஏறத்தாழ 27,006 போலீஸ் கான்ஸ்டபிள்கள் இருக்கிறார்கள். இந்த மாநிலத்திலே அடிப்படைச் சம்பளம் ரூ. 65 முதல் ரூ. 90 வரை. ஒரு ஹெட் கான்ஸ்டபிளுக்கு ரூ. 85 முதல் ரூ. 105 வரை. அவர்கள் மாத்திரம் ஏறத்தாழ 3,089 பேர்கள் இருக்கிறார்கள். சப்-இன்ஸ்பெக்டர்கள் 1,314 பேர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தரப்படும் சம்பளம் ரூ. 140. போலீஸ் இலாக்கா ஸ்டாஃப் நர்சுக்குக் கொடுக்கப்படும் சம்பளம் ரூ. 140 தான். அதாவது அடிப்படை சம்பளம். அதே நேரத்திலே, ஃபைர் சர்வீசிலே இருக்கிறவர்கள் சம்பந்தப்பட்டவரை அவர்களுக்கு உடை சலவை இவற்றிற்காகத் தரப்படும் படி ரூ. 1 முதல் ரூ. 3 வரை இருக்கிறது. ஃபைர் சர்வீசில் இருக்கிறவர் களுடைய உடை அடிக்கடி அழுக்கடையக் கூடிய சூழ்நிலை இருக்கிற காரணத்தினால், அவர்களுக்குக் கொடுக்கப்படும் அலவன்ஸ் ரூ. 1 முதல் ரூ. 3 3 வரை என்பது எப்படி போதுமானதாகும்? வசதிகள் இல்லாமையும் ஊதியம் குறைவாகத் தரப்படுவதும் நேர்மையையும், நீதியையும், நியாயத்தையும் சில சமயங்களிலே தவற விடுவதற்கான காரணங்களாக அமைகின்றன என்பதைச் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது.