கலைஞரின் சட்டமன்ற உரைகள்
489
தேக்க நிலையிலே இருக்கிறார்கள். இதனால் அவர்களது ஆர்வம் குன்றுவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதைக் கருத்திலே கொண்டு, 10 சிறப்புக் காவல் அணிகளிலும் மற்றும் ஒரு படைப் பயிற்சி மையத்திலும் 90 நாயக் பதவிகள் ஹவில்தார் பதவிகளாக நிலை உயர்த்தப்படும்.
நான் ஏற்கெனவே அப்பழுக்கற்ற பணிபுரிந்த காவலர் களுக்கு சிறப்புப்படி, 10 ஆண்டுகள் என்றால் எவ்வளவு; 15 ஆண்டுகள் என்றால் எவ்வளவு; 20 ஆண்டுகள் என்றால் எவ்வளவு என்று சொன்னேன். சென்ற ஆண்டு சொல்லி, இந்த ஆண்டு நிறைவேற்றியிருக்கிறோம். இப்போது அறிவிப்பது இன்னும் புதிய அறிவிப்பு.
15 ஆண்டுகள் நற்பணி புரிந்த காவலர்களுக்கு திங்கள் ஒன்றுக்கு தரப்படுகிற சிறப்புப்படி - அலவன்ஸ் -15 ஆண்டுகள் நற்பணி முடித்தவர்களுக்கு ரூ. 5; 20 ஆண்டுகள் நற்பணி முடித்த காவலர்களுக்கு ரூ. 7.50; 25 ஆண்டுகள் நற்பணி முடித்த காவலர்களுக்கு ரூ. 10; 30 ஆண்டுகள் நற்பணி முடித்த காவலர்களுக்கு ரூ. 15; 15; 35 ஆண்டுகள் நற்பணி முடித்த காவலர்களுக்கு ரூ. 20; என்று இப்போது இருக்கிறது. இனிமேல், 15 ஆண்டுகள் நற்பணி முடித்த காவலர்களுக்கு ரூ. 15; 20 ஆண்டுகள் நற்பணி முடித்த காவலர்களுக்கு ரூ 20; 25 ஆண்டுகள் நற்பணி முடித்த காவலர்களுக்கு ரூ.25; 30 ஆண்டுகள் நற்பணி முடித்த காவலர்களுக்கு ரூ. 30; 35 ஆண்டுகள், கடைசிவரை நற்பணி முடித்த காவலர்களுக்கு ரூ. 40 என்ற வீதத்திலே வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).
15 ஆண்டுக்காலம் பணியாற்றி பதவி உயர்வு கிடைக்காமல் உள்ள காவலர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களுடைய பணித் திறனை மேம்படுத்தவும், ஏற்கெனவே இந்த அரசு பொறுப்பேற்றவுடன் மகளிர் காவலர்களுக்குப் பதவி உயர்வு அளித்ததைப் போலவே, ஆண் காவலர்களுக்கும் பதவி உயர்வு கொடுக்க அரசு முடிவு எடுத்துள்ளது. ஆண்கள் எல்லாம் கைத்தட்டலாம். (மேசையைத் தட்டும் ஒலி). 10 ஆண்டுக்காலம் பணியாற்றிய இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல்நிலைக்