பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/491

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490

காவல்துறை பற்றி

காவலர்களாகப் பதவி உயர்த்தப்படுவார்கள். 15 ஆண்டுக்காலம் முதல்நிலைக் காவலர்களாக பணியாற்றியவர்கள் தலைமைக் காவலர்களாகப் பதவி உயர்த்தப்படுவார்கள். இதனால் மொத்தம் 26 ஆயிரம் காவலர்கள் பயனடைவார்கள்.

மதுரை மாநகருக்கு மேலும் ஒரு ஆயுத சேமப்படைப் பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதைக் கருத்திற்கொண்டும், அங்கே நடைபெறுகின்ற கோவில் திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் இவைகளுக்குத் தகுந்த பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்பதாலும், தற்போதுள்ள 10 காவல் படைப் பிரிவுகளைக் கொண்டு இவை அனைத்திற்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக இயற்றுவதில் ஏற்படும் சிரமங்களைக் கவனத்திற்கொண்டும், மதுரை மாநகரக் காவல் பணியினை வலுப்படுத்திட வேண்டியது மிகவும் அவசியமென அரசு கருதுகிறது. அதன் அடிப்படையில், கூடுதல் சேமப்படை ஒன்றினை மதுரை மாநகரில் ஏற்படுத்திட முடிவெடுக்கப் பட்டுள்ளது.

தென்மாவட்டங்களில் அவ்வப்போது நடைபெற்று வருகின்ற இனக் கவலவரங்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளை உடனுக்குடன் சமாளிப்பதற்குத் தேவையான அளவில் காவல் படையினரை, உரிய நேரத்தில் தேவைப்படும் இடங்களுக்கு அனுப்ப ஏதுவாக காமராசர் மாவட்டத்தில் சிவகாசி நகரினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு சிறப்புக்காவல் அணியின் பிரிவு ஒன்றை அமைத்திட திட்டமிடப் பட்டுள்ளது.

இப்புதிய அணி அமைப்பின் காரணமாக அரசுக்கு ஆண்டு ஒன்றுக்குத் தொடரும் செலவினம் 4 கோடியே முப்பது இலட்சம் ரூபாய் என்பதை நினைவூட்டுகின்றேன். தொடராச் செலவினம் ஐந்து கோடி ரூபாய்.

இந்தக் காவலர் குடியிருப்புகளுக்குத் தனி மீட்டர் பொருத்துவது பற்றி இங்கே பேசப்பட்டது. ஏற்கெனவே பல முறை திரு. சொக்கர் பேசியிருக்கிறார். கடந்த ஆண்டு திரு. ஸ்டாலின் பேசியதை நினைவூட்டி நேற்றைக்கு திரு ரங்கநாதன் பேசினார். திரு. திருநாவுக்கரசு அவர்களும் இங்கே நினைவூட்டினார்கள்.