பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/492

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

491

லத்தீப் அவர்களும் மற்றம் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும், நம்முடைய பழனிசாமி அவர்களும் இங்கே குறிப்பிட்டிருக் கிறார்கள். இவைகளையெல்லாம் மனதில் வைத்து ஒவ்வொரு காவலர் குடியிருப்பிலும் தனித்தனி மீட்டர்களைப் பொருத்தி மின் அளவினைக் கணக்கிட வகை செய்வதே நல்லது என்று கருதி, தற்போது தமிழகத்திலே 22,717 காவலர் குடியிருப்புகள் இருக்கின்றன. இதில் கடந்த பல ஆண்டுகளிலே காவலர் குடியிருப்புகளுக்குத் தனி மீட்டர் வைக்கப்பட்டது 8,785 குடியிருப்புகளுக்குத்தான். இன்னும் 13,932 குடியிருப்புகள் பாக்கி இருக்கின்றன.

இவைகளுக்கெல்லாம் ஆண்டுதோறும் இத்தனை குடியிருப்பு என்று எண்ணலாமா என்று பார்த்து, வேண்டாம் 13,932 குடியிருப்புகளுக்கும் தனி மீட்டர் பொருத்த, ஒரேயடியாக உத்தரவிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு 4 கோடியே 18 இலட்சம் ரூபாய் ஆகும். ரொம்ப குறைவுதான்.

புதிய காவல் சரகம் தோற்றுவித்தல், மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல் மன்னர் திருமலை, வைகை-வீரன் அழகுமுத்து ஆகிய மாவட்டங்களில் எழும் சட்டம்-ஒழுங்கு போன்ற காவல்துறை பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு பொதுமக்களின் தேவைகளை உடனுக்குடன் காவல்துறை கவனிக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, இம்மாவட்டங்கள் அடங்கிய சரகங்கள் சீரமைக்கப்படுகின்றன. மதுரை சரகம்: மதுரை மாவட்டம், காமராசர் மாவட்டம்; இராமநாதபுரம் சரகம்: இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்முத்துராமலிங்க தேவர் மாவட்டம்; திண்டுக்கல் சரகம்: திண்டுக்கல் மன்னர் திருமலை மாவட்டம், வீரன் அழகுமுத்து மாவட்டம். இந்தச் சீரமைப்பின் பலனாக திண்டுக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய சரகம் காவல்துறை துணைத் தலைவர் தலைமையிலே உருவாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கமிஷனர்களைப் பற்றிச் சொன்னார்கள். சேலத்திற்கு இன்னும் புதிய போலீஸ் கமிஷனர் வரவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சொன்னார்கள். அங்கு மாத்திரம் அல்ல,