பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/498

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

497

உரை : 18

நாள் : 25.05.1998

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, காவல்துறை மானியத்தின்மீது மாண்புமிகு உறுப்பினர்கள் பலரும், இறுதியாக எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும் பல அரிய கருத்துரைகளை இங்கே வழங்கி இருக்கின்றார்கள். வழக்கம்போல் நான் நீண்ட நேரம் இவற்றுக்கெல்லாம் விளக்கம் அளிக்க முடியாத நிலையில், உடல் நலிவோடு இந்த மாமன்றத்தில் நின்று கொண்டிருக் கின்றேன். கடந்த இரண்டு நாட்களாகக் கடும் காய்ச்சல். பேசவே முடியாத அளவிற்குக் குரல் நிலை. இருந்தாலும் பதில் உரையை ஒத்தி வைக்கக்கூடாது என்கின்ற முனைப்போடு மருத்துவர்கள் எடுத்துக்கொண்ட பெரும் முயற்சியின் காரணமாக பதில் உரைக்கு என்னைத் தயார்படுத்திக்கொண்டு, இயன்ற வரையில் மாண்புமிகு உறுப்பினர்களுடைய கருத்துக்களுக்கு விளக்கம் அளிக்க விரும்புகின்றேன்.

இந்த மானியக் கோரிக்கை புத்தகத்தில் உள்ள சில குறிப்புகளைப் பற்றி மாண்புமிகு உறுப்பினர்கள் செல்லக்குமார் அவர்களும், திருநாவுக்கரசு அவர்களும், குமாரதாஸ் அவர்களும் ஒன்றைச் சுட்டிக்காட்டினார்கள். அகில இந்திய சராசரி, ஒரு இலட்சம் மக்களுக்கு 134 காவலர்கள் என்று இருக்கும் போது, தமிழ்நாட்டில் 127 காவலர்கள்தான் இருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டினார்கள். அதுகூட நாங்களே கொடுத்த குறிப்புத்தான். அதை மறைக்க வேண்டுமென்று கருதாத காரணத்தால் அந்தக் குறிப்பை கொள்கை விளக்கப் புத்தகத் திலேயே வெளியிட்டு இருக்கின்றோம். ஒருவேளை கொடுக்கா விட்டாலும் நீங்களே எப்படியும் கண்டுபிடித்துப் பேசினாலும் பேசுவீர்கள். இருந்தாலும் ஒன்றை நினைவுபடுத்திக்கொள்ள விரும்புகின்றேன். ஆந்திர மாநிலத்திலே ஒரு இலட்சம் மக்களுக்கு சராசரி காவலர்கள்

17 - க.ச.உ. (கா.து.)