498
காவல்துறை பற்றி
101 பேர்தான். கர்நாடகத்திலே 118 பேர்தான். கேரளாவிலே 124 பேர்தான். பீகாரில் 84 பேர்தான். மத்தியப் பிரதேசத்தில் 124 பேர்தான். ஒரிசாவில் 99 பேர்தான். உத்திரப்பிரதேசத்தில் 103 பேர்தான். மேற்கு வங்கத்தில் 108 பேர்தான். ராஜஸ்தானில் 119 பேர்தான். இந்தக் கணக்கை எல்லாம் காட்டி, இதற்கு மேல் உயர்த்த முடியாது என்று நான் சொல்ல மாட்டேன். மேலும் உயர்த்த வேண்டும். இங்கே 127 என்று இருப்பது போதாது. மேலும் உயர்த்த வேண்டும் என்பதற்காகத் தான். இந்த ஆண்டுகூட 10 ஆயிரம் பேர் காவல்துறையிலே சேர்க்கப்பட இருக்கின்றார்கள் என்பதையும் (மேசையைத் தட்டும் ஒலி). அதற்கான தேர்வுகள் நடைபெற்று முடிந்திருக்கின்றன என்பதையும் நீங்கள் எல்லாம் மிக நன்றாக அறிவீர்கள்.
நம்முடைய மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் 7 கிராமங்களுக்கு ஒரு காவல் நிலையம் என்ற வகையில் அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, அது ரொம்ப சுலபம் தான் என்று சொன்னார்கள். எனக்கு வந்த ஆசையில், அவரைக் கொஞ்ச நேரம் உள்துறை அமைச்சராக உட்கார வைத்து அதைச் செய்து காட்டுங்கள் பார்க்கலாம் பார்க்கலாம் எனக் கேட்க வேண்டும் என்றுகூட ஓர் எண்ணம் ஏற்பட்டது. இப்போது கிட்டத்தட்ட தமிழகத்திலே 1300 காவல் நிலையங்கள் இருக்கின்றன. புறக்காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம் எல்லாவற்றையும் சேர்த்து. கிராமங்கள் என்று எடுத்துக் கொண்டால், வெறும் பஞ்சாயத்துக் கிராமங்கள் அல்லாமல் கிராமங்கள் என்ற நிலையிலே உள்ளவைகள் 58 ஆயிரம் கிராமங்கள் இருக்கின்றன. இந்த 58 ஆயிரம் கிராமங்களுக்கும், 7 கிராமங்களுக்கு ஒரு காவல் நிலையம் என்றால், 8300-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் தேவை. இது இப்போது இருப்பதைவிட 6 அல்லது 7 மடங்கு அதிகம் என்பதை எண்ணிப் பார்க்கும்போது, அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதெல்லாம் பெரும் மலைப்பைத்தான் நமக்கு உண்டாக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.
இன்னொன்று, கடந்த காலத்திற்கும், இந்தக் காலத்திற்கும் உள்ள சில வேறுபாடுகளை திரு. திருநாவுக்கரசு, திரு. செல்லக் குமார் ஆகியோர் எல்லாம் இங்கே சுட்டிக்காட்டினார்கள். கொலைகள் என்ற அந்தக் குறிப்பில் 1995 ஆம் ஆண்டு 93 கொலைகளில் கண்டுபிடிக்கப்பட்டவை 54 ஆக இருக்க, 1997ஆம்