பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/500

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

499

ஆண்டில் 99 கொலைகளில், கண்டுபிடிக்கப்பட்டது 48 தானா என்று கேட்டு, 50 சதவீதத்தைவிட இது குறைவு என்று இங்கே குறிப்பிட்டு, ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்றெல்லாம் அடுக்கு மொழியிலே திரு. செல்லக்குமார் இங்கே எடுத்துக் காட்டினார். ஆனால், நான் பதில்களாக அல்ல, ஒரு விளக்கத்திற்காகச் சொல்ல விரும்புகின்றேன். இதை எப்படிப் பார்க்க வேண்டும் என்றால், 1995 ஆம் ஆண்டில் உள்ள அந்தக் குறிப்பையும் நாம் பார்க்க வேண்டும். சென்ற ஆண்டு, 1996-97 ஆம் ஆண்டு, தரப்பட்ட அந்தப் புத்தகத்தையும் பார்த்தால், 1995 ஆம் ஆண்டிலே கொலைகள் 93, கண்டுபிடிக்கப்பட்டது 40 என்றுதான் இருக்கிறது. அந்த 40 இப்போது 54 ஆகியிருக்கிறது. காரணம், அதற்கு மேல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

அதைப்போலத்தான் இப்போது 48 ஆக இருப்பது, இந்த ஆண்டிலே மேலும் அதிகமாகும் என்ற விளக்கத்தை அவருக்கும், அதைப்போலவே பேசிய மற்றவர்களுக்கும் நான் எடுத்துக்காட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன். 40, 54 ஆக ஆகியிருக்கிறது. இப்பொழுது 54 என்று சொல்லப்படுவது, 1995-ல் 40 ஆகத்தான் இருந்தது; கண்டுபிடிக்கப்பட்டவைகள். அது இப்போது 54 ஆக ஆகியிருக்கிறது. அதைப்போல 48 என்று இருப்பது இந்த ஆண்டில் மேலும் அதிகமாகும் என்பதையும் நான் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பெரிய திருட்டுக்கள் 17,349 என்று இருந்தது, இப்போது 18,511 என்று உயர்ந்துவிட்டது என்று திரு. செல்லக்குமார் இங்கே குறைபட்டுக் கொண்டார். இதை வரிசைப்படி பார்த்தால், 1962 ஆம் ஆண்டு 20,252 ஆக இருந்தது; 1963-ல் 19,622 ஆக இருந்தது; 1964-ல், 20,880 ஆக இருந்தது; 1965-ல் 20,007 ஆக இருந்தது; 1966-ல் 22,612 ஆக இருந்தது. இப்போது 18,511 ஆக இருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. நான் சொன்ன இந்த ஆண்டுகள் எல்லாம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடைபெற்ற ஆண்டுகள் அல்ல என்பதையும் நினைவிலே வைத்துக்கொள்ள வேண்டும்.

ன்னொன்று, துப்பாக்கிச் சூட்டைப் பற்றியும் இங்கே குறிப்பிட்டு திரு. குமாரதாஸ் அவர்கள் வெகுவாக தன்னுடைய கண்டனத்தைத் தெரிவித்தார். 1997-லே 63 துப்பாக்கிப்