பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

காவல்துறை பற்றி

கொள்ளிடம் பாலத்தில் சுங்க வரி செலுத்துவதைப் போல் இப்படிப் பங்கு தர வேண்டிய நிலைமை இருக்கிறது. அவர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை, இருக்கின்ற ஊதியம் போதாது என்கிற இந்த நிலைமைகளால் ஏற்படுகிற தவறுகள் இவை என்பதை நான் இங்கே எடுத்துச் சொல்லாமல் இருக்க முடியாது.

மாண்புமிகு திரு. பூ. கக்கன் : ஊதியம் போதாது என்றால் இப்படி வாங்கவேண்டும் அல்லது வாங்குவது நல்லது என்று கனம் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்கள் சொல்லுகிறார்களா?

கலைஞர் மு. கருணாநிதி : நான் சொல்லாவிட்டாலும் அப்படிச் சொல்லும்படியாக அமைச்சர் விரும்புகிறார் என்று கருதுகிறேன். நான் அப்படி நிச்சயமாக சொல்லமாட்டேன்.

பிரிட்டானிய நாட்டில் போலீசாருக்கு எப்படி அறிவுரை தரப்படுகிறது என்று சொன்னேன். இங்கே கூட, ஊட்டியில் அடிக்கடி போலீஸ் சூபரின்டெண்டுகள் மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டிலே கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் அவர்கள் இவைகளையெல்லாம் எடுத்து விளக்கியிருக்கிறார்கள். அது வரவேற்கத்தக்க ஒன்றுதான். சில பகுதிகளை நான் உள்ளபடியே வரவேற்றுப் பாராட்டுகிறேன்.

கைதிகள் துன்புறுத்தப்படுவதை அந்த மாநாட்டில் அமைச்சர் ஒருவர் வெகுவாகக் கண்டித்துப் பேசியிருக்கிறார். 'லாக் அப்' மாணவர்களைச் சுட்டிக்காட்டி, இவை தவிர்க்கப்பட வேண்டும், இவை அதிகமாகின்றன என்று கனல் கக்க அந்த மாநாட்டில் அமைச்சர் அவர்கள் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். ஒரு எம்.எல்.ஏ. வீட்டில் திருட்டு நடைபெற்ற வேடிக்கையையும் அமைச்சர் அவர்கள் அந்த ஊட்டி மாநாட்டில் எடுத்துச் சொல்லி யிருக்கிறார்கள். ஒரு எம்.எல்.ஏ. வீட்டில் திருட்டு நடைபெற்றது. அந்தத் திருட்டு நடைபெற்ற பிறகு எம்.எல்.ஏ. போலீசில் புகார் செய்கிறார். உண்மையிலேயே திருடியவனைப் போலீசார் பிடிக்கவில்லை. மறாக ஒரு புதிய திருடனைப் பிடிக்கிறார்கள். புதிய திருடனைப் பிடித்தாலும் பழைய சாமான் அவனிடம் இருக்காது. ஆகவே, புதிய சாமானை அவன் கையில் கொடுத்து, இவன்தான் இந்த சாமானைத் திருடியவன்; இவன்தான் எம்.எல்.ஏ. வீட்டுச் சாமானைத் திருடியவன் என்று அவன் மீது வழக்கு