பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/512

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

511

400, 500 பேர் ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் அவ்வளவு அவதிப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. எங்களுடைய வீடு, ஆபீசில் எல்லாம் 'ரெய்டு’ எல்லாம் நடந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவ்வளவும் நடந்தது. நடந்து போனதற்குப் பிறகு இனி நடக்காமல் னி இருப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்தான் அவை. முன்கூட்டியே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நான் திருப்பிக் கேட்கமுடியாதா? உளவுத்துறை Cipher, Zero, எதற்கும் லாயக்கில்லை, என்றெல்லாம் திரு. ஞானசேகரன் இங்கே சொன்னார். அவர் இப்படித் திட்டுவதைப்பற்றி நான் வருத்தப் படமாட்டேன். ஏனென்றால் திட்டத் திட்ட உளவுத்துறை நன்றாக இருக்குமென்பதற்காக தம்பி சொல்லியிருப்பார். இந்த கவர்ன் மெண்டில் இருக்கின்ற உளவுத்துறையைக் குறைகூற வேண்டும் என்பதற்காகச் சொன்னதாக நான் கருதமாட்டேன். "Utter failure" என்று சொன்னார். அது Success ஆக நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் "Utter failure" என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பார் என்று நான் கருதுகிறேனேயல்லாமல் வேறல்ல. ஆனால் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த உளவுத்துறை, உலக உத்தமர், தேசப் பிதா, இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த மகாத்மா காந்தி கொல்லப்படப் போகிறார் என்பதைச் சொல்லாத உளவுத்துறை "Utter failure"-ரா இல்லையா? எண்ணிப் பார்க்க வேண்டும். (மேசையைத் தட்டும் ஒலி). அன்னை என்று நம்மால் பாராட்டப்பட்ட, இந்தியா வினுடைய அன்னை என்று நம்மால் இன்றைக்கும் பாராட்டப்படுகின்ற இந்திரா காந்தியை அவர்களுடைய வீட்டுத் தோட்டத்திலேயே அவர்களுடைய பாதுகாவலர்கள் சுட்டுக் கொல்லப்போகிறார்கள் என்பதை உளவுத்துறை கண்டுபிடிக்க முடியவில்லையே! (மேசையைத் தட்டும் ஒலி).

13 தடவை வந்துவிட்டுப் போனார் ராஜிவ் காந்தி, நான் முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டிற்கு. ஒரு துரும்பு அவர் மேல் படாமல் பாதுகாத்து அவரை டெல்லிக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், கடைசியாக இங்கே வந்தபோது, கவர்னர் ஆட்சியிலே வந்தபோது, தி. மு. க. ஆட்சி கலைக்கப்பட்டு 3 மாதங்கள் கழித்து கவர்னர் ஆட்சியில் ராஜிவ் காந்தி வந்தார்.