பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/515

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514

காவல்துறை பற்றி

ஏறி

பேட்டையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தினுடைய இறுதிக் கூட்டத்திலே, வேண்டுகோள் கூட்டத்திலே பேசிவிட்டு, நான் காரிலே ஏறுகிறேன். அப்போது, மாறன், வீராசாமி ஆகிய இவர்கள் எல்லாம் நான் காரிலே ஏறுவதுவரையிலே என்னிடத்திலே சொல்லாத செய்தியை, காரிலே உட்கார்ந்ததுமே சொன்னார்கள். இப்படி, கோயம்புத்தூரிலே குண்டு வெடித்துவிட்டது என்று. நான் நேராக வீட்டுக்குச் செல்லவில்லை. கோட்டைக்குத்தான் வந்தேன். வந்தவுடனே தலைவர் மூப்பனார் அவர்களுக்குப் போன் செய்தேன்; மாணிக்கம் அவர்களுக்குப் போன் செய்தேன்; சங்கரய்யா அவர்களுக்குப் போன் செய்தேன்; ஜனதா தளத்திலே வடிவேலு அவர்களுக்குப் போன் செய்தேன். மறற்வர்கள் கிடைக்கவில்லை. திரு. அப்துல் லத்தீப் அவர்கள் ஊரிலே இல்லை, அன்றைக்கு உடனடியாகப் புறப்பட்டு எங்கேயோ போய்விட்டார். சமது அவர்களுக்குக்கூட போன் செய்தேன். இப்படி எல்லோருக்கும் போன் செய்தேன். மூப்பனார் அவர்கள் உடனடியாக இங்கே வந்தார். மாணிக்கம் அவர்களும் வந்தார்கள். (குறுக்கீடு). மன்னிக்க வேண்டும். நல்லக்கண்ணு அவர்களும் இங்கே வந்தார்கள். வந்தவுடனே, அவர்களிடத்திலே நிலைமைகளைப் பற்றிச் சொன்னேன். சாயங்காலம் 5.00 அல்லது 6.00 மணிக்கு வந்தவர்கள் இரவு 9.00 மணி வரை என்னோடுதான் கோட்டையிலே முதலமைச்சர் அறையிலேதான் இருந்து, நாங்கள் விவாதித்தோம். என்னிடத்திலே இருந்த குறிப்பைக்கூட அவர்களிடத்திலே எடுத்துக்காட்டினேன். இன்னின்ன இயக்கங் களைத் தடை செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே பரிந்துரை வந்தது, கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம் என்பதற்காக, அப்பொழுதே, கையெழுத்து போட்டிருக்கிற ஃபைல், இதோ இருக்கிறது என்று அந்த ஃபைலைக்கூட காட்டினேன். பிறகு அவர்களிடத்திலே கலந்துபேசித்தான் இரவு 8 மணி அளவிற்கு அந்த இரண்டு இயக்கங்களும் தடை செய்யப்பட்டன. உடனடியாக அவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டார்கள். இதற்கெல்லாம் ஒரு உள்நோக்கம் யாரும் கற்பிக்கக்கூடாது. ஏதோ வேண்டுமென்றே அலட்சியப்படுத்திவிட்டோம் என்று யாரும் கருதக்கூடாது. அரசாங்கமே இதைச் செய்திருக்கலாம் என்று