கலைஞரின் சட்டமன்ற உரைகள்
பேசிக்கொண்டிருந்தார். நான்
517
போராட்டங்களைப்பற்றி
கிருஷ்ணசாமிக்காகச் சொல்லவில்லை. பொதுவாக இப்படிப்பட்ட போராட்டங்களே, அரசு ஒரு கோரிக்கைக்கு இணங்குகிறது என்று அறிவித்த பிறகும் நடக்கின்றன ஏன் அறிவித்தாய் என்று கேட்டு. அதுதான் வேடிக்கை. இதே அவையில் இவ்வளவு பேர் சாட்சியாக
இடைநிலை ஆசிரியர்கள்பற்றி நான் வாக்குறுதி கொடுத்திருக்கிறேன். அதிலே ஒரே சங்கடம் என்னவென்றால் அதன்காரணமாக, அமைச்சுப் பணியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள் இந்த 3 பேரும் இந்த Category -ல் உள்ளவர்கள், 21/2 இலட்சம் பேர் இருக்கிறார்கள். இந்த 21/2 இலட்சம் பேரும் தங்களுக்கும் இதிலே முரண்பாடு ஏற்பட்டுவிட்டது, இடைநிலை ஆசிரியர்களுக்குக் கொடுத்தது போல, எங்களுக்கும் கொடுங்கள் என்று கேட்பார்கள்; எனவே, அவர்களைக் கூப்பிட்டு சமாதானப்படுத்தி, ஒரு சமரசம் செய்து அதற்குப் பிறகு அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்படும் தேதியைத்தான் சொன்னோம். என்றைக்கு அறிவிக்கப்பட்டாலும் முன் தேதியிட்டுத்தான் கொடுக்கப்போகிறோம். அதாவது 1-1-1996 இருக்கிறதே, அந்த 1-1-1996 தேதியிட்டுத்தான் கொடுக்கப் போகிறோம் என்று சொன்னோம். இவ்வளவு சொல்லி ஆகிவிட்டது. இவ்வளவு சாட்சியோடு சொல்லி ஆகிவிட்டது. சொன்ன பிறகும், முதலமைச்சர் அழைத்துப் பேச வேண்டுமாம்? முதலமைச்சர் அழைத்துப் பேசவில்லையா? முதலமைச்சர் அழைத்துப் பேசிய படத்தைக் காட்டவா? படம்கூட என்னிடத்திலே இருக்கிறது. (ஒரு பத்திரிகையில் வந்த படத்தைக் காண்பித்தார்). இந்தப் படத்தில் அவர்களெல்லாம் இருக்கிறார்கள். முரசொலியில் வந்திருக்கிறது. எல்லா பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது. இந்தப் படம் வந்திருக்கிறது. வந்து பேசினார்கள்; பேசிவிட்டு, நாங்கள் One man commission-க்குப் போகமாட்டோம் என்றார்கள். ஏன் போகக்கூடாது? அவர் என்னைவிடப் பெரியவர்தான். ஐ. ஏ. எஸ். ஆபீசர்தான்.
ஐ.
ஏ. எஸ். ஆபீசராக இருந்தவர்தான். தனிப்பட்ட தகுதி என்று பார்த்தால், அவர் சாதாரண ஆள் இல்லை. One man commission-ல் போய் நிலையை விளக்கிச் சொன்னால் என்ன? நீங்கள் வேண்டுமானால் போகவேண்டாம், அவர்களைக் கூப்பிட்டுப் பேசி முடித்துவிட்டு, அதற்குப் பிறகு ஆசிரியர்கள்