கலைஞரின் சட்டமன்ற உரைகள்
51
போடுகிறார்கள். எம்.எல்.ஏ. பறிகொடுத்த பொருள் அதுவா? என்று பார்க்கிறார். “இது நான் பறிகொடுத்த பொருள் அல்ல” என்று அந்த எம்.எல்.ஏ. கூறிவிடுகிறார். இதைக் கூட அமைச்சர் அவர்கள் ஊட்டி மாநாட்டில் எடுத்து விளக்கியிருக்கிறார்கள்.
ஒரு போலீஸ் அதிகாரி தனக்கு வேண்டாத ஒருவரைக் கைது செய்கிறார். அப்படிக் கைது செய்துவிட்ட பிறகு அவன் மீது என்ன வழக்குப் போடுவது என்று யோசிக்கிறார். சுலபமான வழக்கு சாராய வழக்கு. அந்த வழக்கைத் தலையிலே சுமத்தி அவனைச் சிறையில் போடுகிறார். இதையும் அந்த அமைச்சர் ஊட்டியில் நடைபெற்ற போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் எடுத்து கூறியிருக்கிறார்.
ரு
இன்னொரு விபரீதம். அமைச்சர் அவர்களே அந்த மாநாட்டில் கூறியது. திருநெல்வேலியில் ஒரு கொலை நடைபெற்றது. அந்த கொலைக்கு முதல் நாளே, கொலை செய்யப்பட்டவர் போலீஸ்காரர்களுக்குத் தகவல் கொடுக்கிறார். "நான் இந்த நேரத்தில் கொலை செய்யப்படலாம். ஆகவே எனக்கு பாதுகாப்பு கொடுங்கள்” என்று அபயம் கோரி, போலீஸ் இலாக்காவிற்கு அவர், தன்னைப் பாதுகாக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார். ஆனால், போலீஸ் இலாகா அதைக் கவனிக்கத் தவறி விடுகிறது. திட்டமிட்டபடி கொலை நடந்து விடுகிறது. கொலை முடிந்த பிறகு, சிலரை சிறைக்குப் பிடித்துப் போனார்கள். அந்த எதிரிகளும் வழக்கிலே விடுதலை பெற்று விடுகிறார்கள். இப்படி ஒரு அக்கிரமம் நடைபெற்றிருப்பதை அந்த அமைச்சர் ஊட்டி மாநாட்டில் எடுத்துக் குறிப்பிட்டிருக்கிறார். நான் ‘அமைச்சர்', 'அமைச்சர்' என்று சொல்ல அவரை யாரோ எவரோ என்று ஆராயத் தேவையில்லை. மதிப்பிற்குரிய நம்முடைய முதல் அமைச்சர் அவர்களேதான் இவைகளையெல்லாம் அந்த ஊட்டி போலீஸ் அதிகாரிகள் மாநாட்டிலே எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.
இவைகளை நாங்களா சொல்லுகிறோம்? இப்படிப்பட்ட நிலைமைகள் எல்லாம் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் சொல்லப்பட்டிருக்கின்றன. போலீஸ் அதிகாரிகள் தங்களுடைய அதிகாரத்தை நேர்மையான முறையில் பயன்படுத்தாமல், “நான் கொலை செய்யப்படுவேன், வந்து என்னைக் காப்பாற்றுங்கள்”