பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/521

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




520

காவல்துறை பற்றி

கேட்டிருக்கிறோம். தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டிருக் கிறோம்.

காவலர் பயிற்சிக் கழகம். நம்முடைய அப்துல் லத்தீப் அவர்கள் சொன்னார்கள் காவலர்களுக்கு அதிகப் பயிற்சி வேண்டுமென்று. இன்று அவர் காவல் துறையைப்பற்றி தனித் தனியே எதுவும் பேசவில்லை. பொதுவான உபதேசங்கள், நம் முடைய காவல்துறைக்கு, ரொம்ப அருமையான உபதேசத்தினை நம்முடைய லத்தீப் அவர்கள் இங்கே சொல்லியிருக்கிறார்கள். தமிழ்நாடு காவல்துறையின் அனைத்து அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் புதிதாக சீருடைப் பணிக்கு தேர்வு செய்யப் படுபவர்களுக்கும் உயர்தரப் பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன் ரூபாய் 20 கோடி செலவில் தமிழ்நாடு காவல் பயிற்சிக் கழகம் நிறுவ தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி). திரு. லத்தீப் அவர்கள் சொன்ன கருத்து. இக்கழகம், மாவட்ட அளவில் பயிற்சி மையங்களில் நடைபெறும் பயிற்சிகளை ஒருங்கிணைக்கும் உயரிய தலைமைக் கழகமாகவும் செயல்படவுள்ளது. பயிற்சிகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான இந்திய அரசின் மானியத்தையும் இதற்குப் பயன்படுத்திக் கொள்ள அரசு உத்தேசித்துள்ளது. சென்னை வண்டலூர் அருகிலே இக்கழகம் அமைக்கப்பட சுமார் 133 ஏக்கர் நிலத்தை காவல்துறைக்கு மாற்றம் செய்ய ஆணை வழங்கப்பட்டுவிட்டது. அங்கு காவலர் பயிற்சிக் கழகம் நிறுவுதல் தொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநர் மதிப்பீடுகளைத் தயாரித்து வருகிறார். உரிய உள்கட்டுமான வசதிகளோடு காவலர் பயிற்சிக் கழகம் விரைவில் தொடங்கப்படும்.

அடுத்து காவலர் பயிற்சிப் பள்ளி. காவலர்களுக்கு அடிப்படைப் பயிற்சி அளிக்கப்படுவதற்காக, முதற்கட்டமாக, மூன்று நிரந்தரக் காவலர் பயிற்சிப் பள்ளிகள் உருவாக்கப் படவுள்ளன. அதற்காக 1.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்று காவலர் தங்கும் விடுதிகள் கட்டப்படவுள்ளன. தனியார் வாடகைக் கட்டடங்களில் இயங்கிவரும் 25 காவல் நிலையங்களுக்கு, முதற்கட்டமாக, ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டடங்கள் கட்டப்படவுள்ளன. (மேசையைத் தட்டும் ஒலி). தற்போது தமிழ்நாடு அதிரடிப் படையினர் தலைமையகம்