பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/527

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




526

காவல்துறை பற்றி

நாகை மாவட்டக் காவல் அலுவலகம். 1971 முதலாகவே, அங்கே இந்த அலுவலகம் வாடகைக் கட்டடத்திலே இயங்கி வருகிறது. எனவே, நாகை வெளிப்பாளையம் என்ற இடத்திலே அனைத்துக் காவல் அலுவலகங்களும் ஒரே இடத்திலே செயல்பட வசதியாக 62 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடத்தை, நாகை மாவட்டக் காவல் தலைமை அலுவலகத்தைக் கட்ட இந்த அரசு முடிவு செய்துள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி).

காவலர்களுடைய நலன் காக்க, நிதி ஒதுக்கீடு போது மானதாக இல்லை என்று குமாரதாஸ் அவர்கள் குறைபட்டுக் கொண்டார்கள். ஏதோ 4% தான் இருக்கிறது; அதை 6% ஆக்க வேண்டுமென்றெல்லாம் சொன்னார்கள். நாம் அதிலே என்றும் குறை வைக்கவில்லை. நான் முதலிலே சொன்னதெல்லாம், காவல் துறையினை நவீனப்படுத்துவதற்காகச் சொன்ன செலவுகள். காவலர்களுடைய நலனுக்காக என்று எடுத்துக் கொண்டால், நிறையச் செய்திருக்கிறோம். 1991-92 என எடுத்துக் கொண்டோம் என்றால், 89 இலட்சம் ரூபாய்தான் செலவு செய்திருக்கிறார்கள். காவலர் நலனுக்காக 1992-93-லே, 12.80 கோடி ரூபாய்; 1993-94-லே, 16 கோடி ரூபாய்; 1994-95-லே 20 கோடி ரூபாய். 1995-96-லே, 141/2 கோடி ரூபாய். இவையெல்லாம் 5 வருடங்களுக்கான செலவு, கழக அரசு பொறுப்பேற்றபிறகு, 1996-97-ல் 52 கோடி ரூபாய், 1997-98-லே 99 கோடி ரூபாய் 5 வருடங்களிலே, காவலர் 5 நலனுக்காக முன்பிருந்த அரசு செலவழித்தது 65 கோடி ரூபாய். 2 வருடங்களிலே, நாம் செலவழித்தது, 151 கோடி ரூபாய். (மேசையைத் தட்டும் ஒலி). இதைக்கூட, பத்திரிகையிலே செய்தியைப் பார்த்துவிட்டு, அந்த அம்மா அறிக்கை விட்டாலும் விடுவார்; 'இவையெல்லாம் நான் நினைத்தது' என்று. (சிரிப்பு). 'நான் நினைத்ததை, அவர் கொடுத்திருக்கிறார்' என்று சொல்வார். பரவாயில்லை. நினைத்ததற்காகவாவது நன்றி கூறுவோம்.

காவலர்களுக்கான உணவுப்படி சட்டம்-ஒழுங்கு மற்றும் அவசரகாலப் பணிகளில், காவலர்களை ஈடுபடுத்தும்போதும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளைக் கவனிக்க மற்ற இடங் களுக்கும், மாவட்டங்களுக்கும் அனுப்பும் சமயங்களிலும் காவலர்களுக்கு உணவுப்படி வழங்கப்படுகிறது. 1997 ஆம்