பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

போலீஸ்

காவல்துறை பற்றி

உள்ள

என்று அபயக் குரலைக் கொடுக்கும்போது ஓடோடி வந்து காப்பாற்றுவதற்குப் இலாகாவிலே முக்கியமானவர்கள் தயங்குகிறார்கள் என்றால், பிறகு யாருக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இருக்க முடியும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அதே அமைச்சர், பிறகு 1965-ம் ஆண்டில் நடைபெற்ற ஊட்டி மாநாட்டில், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி பற்றிப் பேசப்பட்ட நேரத்தில், “இந்தி எதிர்ப்பின்போது எங்கள் மீது மாணவர்கள் கற்களை வீசினார்கள்" என்று ஒரு அதிகாரி சொன்ன நேரத்தில், “அவர்களையெல்லாம் இரக்கமின்றி கையை ஒடியுங்கள், காலை ஒடியுங்கள்” என்று கூறியதாக நான் கேள்விப்பட்டேன். (ஷேம், ஷேம்).

மாண்புமிகு திரு. எம். பக்தவத்சலம் : "கையை ஒடி காலை ஒடி” என்று நான் சொன்னதாக ஆதாரபூர்வமாகச் சொல்ல வேண்டுமேயொழிய ஷேம், ஷேம்' என்று சொல்லுவதில் பிரயோஜனம் இல்லை. ல்லை. “கையை ஒடி காலை காலை ஒடி ஒடி” என்ற வார்த்தைகள் என் வாயிலிருந்து வரக்கூடிய வார்த்தைகள் அல்ல.

கலைஞர் மு. கருணாநிதி : 1961-க்கான நடவடிக்கைகள் பற்றிச் சொன்னேன். அதற்கான நடவடிக்கைக் குறிப்பு இருக்கும். அதேபோல் 1965-க்கான நடவடிக்கைக் குறிப்பை முதல் அமைச்சர் அவர்கள் இந்த மன்றத்தில் வைத்தால்.

மாண்புமிகு திரு. எம். பக்தவத்சலம் : நான் சொன்னது எனக்குத் தெரியும். "கையை ஒடி காலை ஒடி” என்று ஒருக்காலும் நான் சொல்லவில்லை. அம்மாதிரி சொல் என் வாயிலிருந்து வரவே வராது.

கலைஞர் மு. கருணாநிதி : அது இல்லை என்று நிரூபிக்க வேண்டியது அமைச்சருடைய பொறுப்பு.

மாண்புமிகு திரு. எம். பக்தவத்சலம் : ஏதாவது ஒன்றைச் சொல்லி விட்டு, அதை நிரூபி என்பது ஒரு அற்புதமான முறையாக இருக்கிறது. எதையாவது ஒன்றைச் சொல்லிவிடுவது. பிறகு "இல்லை" என்று நிரூபிக்க வேண்டும் என் சொல்வதென்றால் இதுவா முறை.

று