கலைஞரின் சட்டமன்ற உரைகள்
531
அதாவது, 25% சதவிகிதம் பதவி உயர்வு தரப்பட்டிருக் கிறது. மேலும் இவர்களுக்குப் பதவி உயர்வு அளிப்பது என்ற அடிப்படையில் 15 ஆண்டுகள் பணி செய்த காவலர்களுக்கு தலைமைக் காவலர் பதவி உயர்வு அளிக்கப்படும் என்று சென்ற ஆண்டு இந்த அரசு அறிவித்ததைத் தொடர்ந்து 9000 காவலர்கள், தலைமைக் காவலர்களாகப் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து இப்போது தலைமைக் காவலர்கள் தங்களையும் உதவி ஆய்வாளர்களாக (S.I.) பதவி உயர்வு செய்ய வேண்டுமென்று கோரி வருகின்றார்கள்.
இதனையும் அரசு பரிவுடன் கவனித்து 10 ஆண்டுகள் தலைமைக் காவலர்களாகப் பணி முடித்தவர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் (Special S.I.) பதவி உயர்வு அளித்து மற்ற உதவி ஆய்வாளர்களுக்கு இணையான சம்பளத்தை இவர் களுக்கும் வழங்கிடலாம் என இந்த அரசு தீர்மானித்துள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி). இதன் மூலம் இரண்டாம் நிலைக் காவலராகப் (Sec- ond Grade) பணியில் சேரும் ஒருவர் 25 ஆண்டுகளில் உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்து, Ministerial Staff - அமைச்சுப் பணியிடங்கள். காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் புதிய பணியிடங் களைத் தோற்றுவிக்க வேண்டுமென்று பலகாலமாகக் கோரி வருகின்றார்கள். குறிப்பாக புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட மாவட்டங்களிலும், புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட ஆயுதப்படைப் பிரிவிலும் போதுமான அமைச்சுப் பணியாளர்கள் இல்லை யெனவும், அவ்விடங்களுக்குப் போதிய பணியிடங்களைத் தோற்றுவிக்க வேண்டுமெனவும் கோரிஉள்ளார்கள். அரசு இக்கோரிக்கையை ஏற்று, தேவையான புதிய அமைச்சுப் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். அதற்கான பிரேரணைகள் காவல்துறைத் தலைவரிடமிருந்து பெற்று ஆணைகள் வெளியிடப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் தங்களது குறைகளைத் தங்களுடைய மேல் அதிகாரிகளுக்கோ அல்லது