பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/533

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




532

காவல்துறை பற்றி

பல

அரசாங்கத்திற்கோ சரியான முறையில் தெரிவிக்க முடிவதில்லை என்ற குறை அவர்கள் மத்தியிலே நெடுங்காலமாக இருந்து வந்தது. காவல்துறையில் காவலர்களின் குறைகளைக் களைய நடைமுறைகள் இருந்தாலும் அவை பலகாலமாக முழுமையாகச் செயல்படவில்லை என்பதால் காவலர்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக புதிய அணுகுமுறைத் திட்டம் ஒன்றைப் புகுத்துவது குறித்து அரசு பரிசீலித்தது. அதன்படி காவலர்கள் தங்களுடைய குறைகளை சம்பந்தப்பட்ட காவல்துறை அதிரிகாரிகள் விரைந்து தீர்த்து வைப்பதற்கும், தக்க செயல்முறை நடவடிக்கைகளை வரையறுத்து அவற்றைத் தவறாது கடைபிடிக்க வேண்டுமென்றும் அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர்கள் மற்றும் மாநகரக் காவல்துறை ஆணையர்கள் ஆகியோருக்கு அறிவுரைகள் வழங்கி அரசு சமீபத்தில் ஆணை பிறப்பித்துள்ளது. சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திலும், அரசுத் தலைமைச் செயலகத்திலுள்ள உள் துறையிலும், காவலர்களின் குறைகளைக் களைவதற்காக தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மதுவிலக்குபற்றியும் கள்ளச் சாராயம்பற்றியும் நிரம்பப் பேசப்பட்டிருக்கிறது. இந்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு முன்பு தனியாகச் செயல்பட்டு வந்தது. இதைக் காவல்துறையிலுள்ள மற்ற பிரிவுகளோடு இணைத்தால் மதுவிலக்கு நல்ல முறையிலே அமலாகும் என்ற கருத்துக்கள் கூறப்பட்டன. அந்தக் கருத்துக்களின் அடிப்படையிலே மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கலைக்கப்பட்டு மாவட்ட காவல்துறையோடு இணைக்கப்பட்டது. அதனுடைய செயல்பாடுகள் மிகவும் மந்தமான நிலையில் இருந்தன. என்பதற்குப் புள்ளிவிவரங்களே அத்தாட்சி. குமாரதாஸ் குறிப்பிட்டாரே அந்த மூன்று இலட்சம், அதுவே குறைவு என்று நான் சொன்னேன். 1996 ஆம் ஆண்டு இந்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இருந்தபோது, 1996 ஆம் ஆண்டிலே 5,17,799 வழக்குகள்; ஆனால் அந்தப் பிரிவு எடுக்கப்பட்ட பிறகு 3,05,054 என்று அது குறைந்து விட்டது. கைது செய்யப்பட்டவர்களுடைய எண்ணிக்கையும் அப்படித் தான். 1996-இல் மதுவிலக்குக் குற்றத்திலே கைது செய்யப்பட்டவர்கள் 4,91,141 பேர். இதை அறிவித்த பிறகு 2,96,000 என்று குறைந்து விட்டது. எனவே, கடந்த இரண்டு ஆண்டுகளிலே ஏற்பட்ட தொய்வு நிலையைக்