540
காவல்துறை பற்றி
அவரும் சிரிக்க சிரிக்க, கேட்க கேட்க, அந்தப் பாடலைப் பாடியும் காட்டியிருக்கின்றேன்.
ண்பர்களுடைய
காவல் துறை ந சங்கடங்களை உணர்ந்துதான், அவர்களுடைய மாதாந்திர ஊதியம் மிக மிகக் குறைவாக இருப்பதையெல்லாம் எண்ணிப்பார்த்துத்தான், 1969ஆம் ஆண்டு நான் ஆட்சிப் பொறுப்பை, முதலமைச்சர் பொறுப்பை ஏற்றவுடன், திரு. ஆர்.ஏ. கோபாலசாமி, ஐ.சி.எஸ். அவர்களுடைய தலைமையில் இந்தியாவிலேயே முதல் தடவையாக, காவல் துறையினருடைய நிலைமைகளை ஆராய்ந்து சொல்ல, ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் 134 பரிந்துரைகளை வழங்கியது. அவைகளை ஏற்றுக்கொண்டு, உடனடியாக அவற்றை அப்போது நடைமுறைப்படுத்தியதும், இந்தக் கழக அரசுதான். Second Grade Constables - இரண்டாம் நிலைக் காவலர்களுடைய அடிப்படை மாத ஊதியம் அன்றைக்கு 70 ரூபாய் முதல் 95 ரூபாய் வரை இருந்தது. அதை அந்தக் கமிஷனுடைய சிபாரிசின்படி 150 ரூபாய் முதல் 225 ரூபாய் என்று, முதன் முதலாக உயர்த்தியது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் (மேசையைத் தட்டும் ஒலி). எஸ்.எஸ்.எல்.சி. தேர்விலே வெற்றிபெற்றவர்கள் First Grade Constables ஆகலாம் என்ற புதிய நிலையை உருவாக்கி, அவர்களுடைய அடிப்படை மாத ஊதியம் 200 ரூபாய் முதல் 300 ரூபாய் என்று அவர்களுக்கும் ஊதியம் உயர்த்தப்பட்டது. ஆனால், இப்போது அந்த இரண்டாம் நிலைக் காவலர்களுடைய மாத அடிப்படை ஊதியம் 3,050 ரூபாய். முதல் நிலைக் காவலர்களுடைய மாத அடிப்படை ஊதியம் ரூ. 3200 என்று உயர்த்தப்பட்டுள்ளது என்பதையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
இதற்கிடையிலே 1989 ஆம் ஆண்டு மீண்டும் கழக அரசு அமைந்தபோது முன்னாள் தலைமைச் செயலாளர் திரு. சபாநாயகம், ஐ.ஏ.எஸ். அவர்களுடைய தலைமையில் இரண்டாவது போலீஸ் கமிஷன் அமைக்கப்பட்டு, அவர்கள் தந்த 112 பரிந்துரைகளில் 102 பரிந்துரைகள்மீது முடிவெடுத்து ஆட்சி அப்போது கலைக்கப்படுவதற்கு முன்பு, 79 பரிந்துரைகள் நடைமுறைப் படுத்தப்பட்டன என்பதையும் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.