பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/542

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

541

காவலர்களுடைய ஊதியத்தைப்பற்றி உறுப்பினர்களும், எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும் திரு. பழனிசாமி இங்கே பேசும்போதும் குறிப்பிட்டார்கள். ஓர் ஒப்பீடு பார்த்தால், தென்மாநிலங்களில் பணிபுரிந்துவரும் இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் இதரப் படிகளுடைய விவரங்கள் ஒரு மாதத்திற்கு என்று எடுத்துக்கொண்டால், தமிழ்நாட்டில், அடிப்படைச் சம்பளம் 3050 ரூபாய். ஆந்திராவில் 1595 ரூபாய், கேரளாவில் தமிழ்நாட்டைப் போலவே 3050 ரூபாய். கர்நாடகத்தில் 3000 ரூபாய். பாண்டிச்சேரியில் 2750 ரூபாய். இந்த அடிப்படைச் சம்பளத்தோடு சிறப்பு ஊதியம், அகவிலைப்படி, வீட்டுவாடகைப் படி, நகர ஈட்டுப் படி, சீருடைப் படி ஆகிய இத்தனையும் சேர்த்தால், தமிழ்நாட்டில் இரண்டாம் நிலைக் காவலர்களுக்குத் தரப்படுகின்ற மாதாந்திரச் சம்பளம் 4630 ரூபாய். ஆந்திராவில் 3172 ரூபாய். கேரளத்தில் 3943 ரூபாய். கர்நாடகத்தில் 4262 ரூபாய். பாண்டிச்சேரியில் 4080 ரூபாய். ஆக, தமிழ்நாட்டில்தான் 4630 என்கின்ற அதிகத் தொகை, எல்லாவற்றையும் சேர்த்து மாதந்தோறும் இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதைப்போலவே, காவல் துறை உதவி ஆய்வாளர்கள் ஊதியம். எஸ்.ஐ. ஆகியோருடைய ஊதியம், ஊதியக் குழுவினுடைய பரிந்துரைகளை ஏற்பதற்கு முன்னால், உதவி ஆய்வாளர்கள், துணை வட்டாட்சியர்கள் ஆகியோருடைய அடிப்படைச் சம்பளம் 1600 ரூபாயாக இருந்தது. அதைத்தான் அன்றைக்கு சுப்பராயன் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டார்கள். "இப்பொழுது துணை வட்டாட்சியர்களுடைய ஊதியத்திற்குக் குறைவாக இது இருக்கிறதே, இதைச் சரிசெய்யவேண்டும்” என்று குறிப்பிட்டார்கள். ஆனால் காவல்துறை ஆய்வாளர்களுடைய ஊதியத்தைப் பொறுத்தவரையில் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தைத் தருகிறோம் என்று வாக்களித்து, மத்திய அரசு என்ன ஊதியம் தருகிறதோ அதைத்தான், இங்கேயும் தந்து கொண்டிருக்கிறோம். இதிலே சில மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால், ஒன்றைச் சரிசெய்ய ஆரம்பித்தால், தொடர்ந்து ஒரு சங்கிலித் தொடர்போல மற்ற மற்ற துறைகளில் உள்ளவர்கள் போராடக்கூடும், வாதிடக் கூடும் என்பதையும் மறந்துவிடக்கூடாது. இந்தப் பரிந்துரைகளை ஏற்றபின், எஸ்.ஐ.-யினுடைய அடிப்படை