பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/545

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




544

காவல்துறை பற்றி

சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 1998ஆம் ஆண்டில் மாத்திரம் டெல்லியில் 649 பேரும், மும்பையில் 351 பேரும், கல்கத்தாவில் 80 பேரும், சென்னையில் 36 பேரும் கொலை செய்யப்பட்டிருக் கிறார்கள். 36 பேர் கொலை செய்யப்பட்டதை நான் சரியென்றோ, பரவாயில்லை என்றோ ஒத்துக்கொள்ளக்கூடியவன் அல்ல. இருந்தாலும், இந்தியாவிலே உள்ள பெரிய தலைநகரங்களோடு ஒப்பிடும்போது 1998ஆம் ஆண்டிலே மாத்திரம் கற்பழிப்புகள், டெல்லியில் 438, மும்பையில் 115, கல்கத்தாவில் 25, சென்னையிலே 5 தான். கடத்தல்கள் டெல்லியிலே 1333 மும்பையில் 179 கல்கத்தாவில் 117, சென்னையிலே 15, கொள்ளைகள், டெல்லியிலே 26,911, மும்பையில் 12,400 கல்கத்தாவிலே 4,041, சென்னையில்

5

1,196.

புதுடெல்லியில் உள்ள தேசிய குற்ற ஆவணக் கூடம் National Crime Records Bureau அண்மையில் மாநில வாரியாக நான் முதலிலே சொன்னது மாநகர வாரியாக ஒரு பட்டியலைப் புள்ளிவிவரங்களோடு வெளியிட்டிருக்கிறது. 1996 வரை அது கணக்கெடுத்து இருக்கிறது. அந்த ஆண்டு முழுவதுமாகக் கணக்கெடுத்து வெளியிட்டிருக்கிறது. அடுத்த ஆண்டுகளுக்கான கணக்குகள் வரவில்லை. உத்தரப்பிரதேசத்தில் 8,514 கொலைகள், பீகாரில் 5,277 கொலைகள், மராட்டியத்தில் 2,782 கொலைகள், ஆந்திராவில் 2,620 கொலைகள். மேற்கு வங்கத்தில் 1,929 கொலைகள், தமிழ்நாட்டில் 1,889 கொலைகள். மத்தியப்பிரதேசத்தில் கற்பழிப்புகள் 3,265, உத்தரப்பிரதேசத்தில் 1,854, ஆந்திராவில் 812, கேரளாவில் 389, தமிழ்நாட்டில் 327.

அதேபோன்று கூட்டுக் கொள்ளை (Dacoity). பீகாரில் 2,678, உத்தரப்பிரதேசத்தில் 1,259, மேற்கு வங்கத்தில் 728, ஆந்திராவில் 451, கர்நாடகத்தில் 256, தமிழ்நாட்டில் 172. கொள்ளை (Robbery) உத்தரப்பிரதேசத்தில் 5,395, பீகாரில் 2,955, மராட்டியத்தில் 2,865, மேற்கு வங்கத்தில் 869, ஆந்திராவில் 775, கர்நாடகாவில் 994, தமிழ்நாட்டில் 600. வன்குற்றங்கள் (Violent Crimes) - ஐப் பொறுத்த வரையில் உத்தரப்பிரதேசத்தில் 17,022. பீகாரில் 12,363, மேற்கு வங்கத்தில் 4,381, ஆந்திராவில் 4,658, கர்நாடகாவில் 3,085, தமிழ்நாட்டில் 2,988 என்கின்ற அளவில்தான் தமிழ்நாட்டிலே குற்றம், கொள்ளை, கொலை போன்ற காரியங்கள் மற்ற