கலைஞரின் சட்டமன்ற உரைகள்
545
மாநிலங்களோடு ஒப்பிடும்போது, மாநில அளவிலேகூடக் குறைவாக இருக்கிறது என்ற உண்மையை நமக்குத் தெரிவிக்கிறது. அதேபோல, களவுகள் நிறைய நடைபெறுகின்றன என்பதைப்பற்றி நம்முடைய மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இங்கே குறிப்பிட்டார்கள். ஆனால், களவுகள் நடைபெறாத ஒரு சமுதாயத்தை நாம் கனவு காணுகிறோம். எந்தத் தவறும் நடைபெறாத ஒரு சமுதாயத்தைக் கனவு காணுகிறோம். அது நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இருந்தாலும் நடைபெற்றுவிட்ட தவறுகள் மேலும் நடக்காமல் இருப்பதற்காக, கண்டுபிடித்து வழக்குத் தொடுத்து. தண்டணை கொடுப்பது; அதிலே நாம் இன்றைக்குச் சுணங்கி போய்விட்டோமா என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம். சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரையில், களவாடிய ய பொருட்களைத் திரும்பப் பெற்று ஒப்படைத்த வகையில், 25-2-1998 அன்று ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள், 490 பவுன் தங்க நகைகள், 7 கிலோ வெள்ளிப் பாத்திரங்கள், எலெக்ட்ரானிக் சாதனங்கள், கேமராக்கள், 70 மோட்டார் சைக்கிள்கள், 11 கார்கள், 9 ஆட்டோக்கள் மற்றும் ரொக்கப் பணம் ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாய் சென்னை மாநகரக் காவல் துறையினரால் களவு கொடுத்த பொதுமக்களுக்குத் திரும்ப ஒப்படைக்கப்பட் டிருக்கிறது. இப்போது மொத்தமாகச் சொன்ன கணக்கு பலருக்குப் பகிர்ந்தளித்து, திரும்ப ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, 6-6-1998 அன்று 107 பவுன் தங்க நகை, வைர நகை, தொலைக்காட்சிப் பெட்டிகள், ரேடியோக்கள், 7 கிலோ வெள்ளிச் சாமான்கள், 3 மோட்டார் சைக்கிள்கள், 4 கார்கள் மற்றும் ரொக்கப் பணம் 2 இலட்சம் என்று மொத்தம் 10 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருட்டுக் கொடுத்தவர்களுக்குக் காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.
27-8-1998 அன்று 200 பவுன் தங்க நகைகள், 7 கிலோ வெள்ளிப் பாத்திரங்கள், எலெக்ட்ரானிக் சாதனங்கள், 10 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரொக்கப் பணம் 2.4 இலட்சம் ரூபாய் என்று மொத்தம் 35 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் காவல் துறையால் திருட்டுக் கொடுத்த பொதுமக்களுக்குத் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன. 15-10-1998 அன்று 240 பவுன் தங்க