பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/547

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




546

காவல்துறை பற்றி

நகைகள், தங்கக் கட்டிகள், வீடியோ டிஸ்க்குகள், தோல் பொருட்கள், 50 இரு சக்கர வாகனங்கள், 2 கார்கள், 8 ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் ரொக்கப் பணம் 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 65 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன. 31-12-1998 அன்று, 350 பவுன் தங்க நகைகள், 15 கிலோ வெள்ளிச் சாமான்கள், 50 மோட்டார் சைக்கிள்கள், 3 கார்கள், 11 ஆட்டோக்கள், ரொக்கப் பணம் 2.85 இலட்சம் ரூபாய் உட்பட ஒரு கோடியே 6 இலட்சம் ரூபாய் 6 மதிப்புள்ள பொருட்கள் காவல்துறையால் திரும்ப ஒப்படைக்கப் பட்டிருக்கின்றன.

இப்போது, 5-5-1999 அன்று 344 பவுன் தங்க நகைகள், 72 மோட்டார் சைக்கிள்கள், 16 கார்கள், 12 ஆட்டோக்கள், ரொக்கப் பணம் சுமார் பத்து இலட்சம் ரூபாய் உட்பட ஒரு கோடியே 33 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திரும்ப ஒப்படைக்கப் பட்டிருக்கின்றன.

கடந்த ஓராண்டில் மட்டும் 'சென்னை மாநகரக் காவல் துறையினரால் மாத்திரம் மொத்தம் நான்கு கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள களவாடப்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டு திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன. (மேசையைத் தட்டும் ஒலி). இதில் ஒன்றும் மகிழ்ச்சியடைவதற்கு எதுவுமே இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், இவ்வளவும் களவாடப்பட்டன என்பதை எண்ணி அதற்குத்தான் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இங்கே தெரிவித்தார்கள். அவருக்கு ஆறுதலாகத்தான் இதெல்லாம் திரும்பப் பெறப்பட்டுவிட்டன என்ற இந்தச் செய்தியையும் நான் அவருக்குச் சொல்கிறேன். ஆனால், இவைகள் சமுதாயத்திலே தொடர்ந்து நடைபெற்று வருகின்ற குற்றங்கள். இது நாட்டுக்கு நாடு, மாநிலத்திற்கு மாநிலம், மாநகரத்திற்கு மாநகரம் வேறுபடுகின்றன என்பதை ஒப்பிட்டுத்தான் இங்கே நான் எடுத்துக்காட்டினேன்.

சென்னையிலே ரவுடிகளுடைய தொல்லை அதிகரித் துள்ளதாக திரு. செல்லக்குமார் அவர்கள் இங்கே பேசினார்கள். பேசியவர்கள் சில பேரை இன்றைக்குக் காணோம். மிக வேகமான குற்றச்சாட்டுக்களை எல்லாம் அள்ளி வீசியவர்கள் இங்கே இல்லை. திரு. அப்துல் லத்தீப் அவர்களைக்கூட இங்கே காணோம்.