548
சூ
காவல்துறை பற்றி
தலைமறைவாய் இருந்த சூ என்கின்ற சுந்தரம், இளவரசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டார்கள் என்ற விவரம் உங்களுக்கு நன்றாக நினைவிருக்கும். சென்னையில் சேரா, தாதா குட்டியப்பன், ராட்டினகுமார், குண்டு பத்மநாபன், பிரபாகரன், பங்க் குமார், தென்றல் ராஜா, உருண்டை தங்கவேல், வெள்ளை ரவியின் கூட்டாளிகள் வெங்கடேசன், ஜெகதீஷ், காண்டீபன், செல்வம், கொடுங்கையூரைச் சேர்ந்த குண்டு சங்கர், கேட் ராஜேந்திர னுடைய கூட்டாளிகள் மகேஷ், பாக்ஸர் வடிவேலு, பேருந்துகளில் அடிக்கடி ஜேப்படி செய்யும் ராஜ்குமார், ஜெயராமன், வெங்கடேசன் உள்ளிட்டோர் குண்டர் தடுப்புச் சட்டத்திலே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அண்மையிலேகூட செங்கற்பட்டு டி.ஐ.ஜி. அவர்கள் துரத்திச் சென்று சிவா என்ற ரவுடியைப் பிடித்த செய்தி நான்கு நாட்களுக்கு முன் பத்திரிகையிலே வந்ததை நீங்கள் எல்லாம் மறந்திருக்கமாட்டீர்கள். முந்தைய காலத்தில் நடைபெற்றதைப்போலத் தெருக்களிலே வெளிப்படையாகக் கத்தி வீச்சுப் போராட்டங்களோ, அதுபோல நீதிமன்றங்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற முக்கிய இடங்களில் வெளிப்படையாக நடக்கும் கைகலப்புகளோ இப்போது அந்த அளவுக்கு இல்லை; வெகுவாகக் குறைந்திருக்கிறது என்பதற்காகத்தான் இதை நான் இங்கே குறிப்பிடுகின்றேன்.
மனமகிழ் மன்றங்கள்பற்றிச் சொன்னார்கள். நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சில ஓட்டல்களின் பெயரையே குறிப்பிட்டு அங்கெல்லாம் நடைபெறுகின்ற லீலாவிநோதங்கள், வேலைகள், லீலைகள் இவைகளைப்பற்றி எல்லாம் இங்கே குறிப்பிட்டார்கள். அவர் பேசும்போது அவருடைய உருவத்தையே நான் கவனித்துக்கொண்டிருந்தேன். (சிரிப்பு) இவர் இதை எல்லாம் பேசுகிறாரே என்று ஆச்சரியத்தோடு அதை கவனித்துக்கொண் டிருந்தேன். ஏனென்றால், உண்மையைப் பேச வேண்டுமல்லவா ? நாடு நலம்பெற, சமுதாயம் நல்ல முறையில் ஒழுக்கமாக இருப்பதற்காக இவைகளை அவர் சொல்கிறார். இருந்தாலும் இன்றைக்கு உலகத்திலே பல பகுதிகளிலே உள்ள இத்தகைய Five Star ஓட்டல்கள் எல்லாம் இப்படித்தான் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடைய தொழிலை நடத்தி வருகிறார்கள். சென்னையிலும் அத்தகைய போட்டி இன்றைக்கு இருப்பதை நாம் உணர முடிகிறது.