பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

காவல்துறை பற்றி

போயிற்று என்ற அளவுக்குத்தான் வந்ததே தவிர, கொலை நடந்தது உண்மை, பிணம் கிடந்தது உண்மை, கால் இல்லாத முண்டமாகக் கிடந்தது உண்மை, மூக்கு அறுபட்டுக் கிடந்தது உண்மை. ஆனால், இதுவரையிலும் அந்தக் கொலை கண்டுபிடிக்க முடியவில்லை. இது இன்றையதினம் இருக்கிற நிலைமை.

போலீஸ் அதிகாரிகள் இன்னும் பயங்கரமான தவறுகள் சில செய்கிறார்கள் என்பதற்குச் சில ஆதாரங்களை இந்த மாமன்றத்தில் எடுத்து வைப்பது என்னுடைய தலையாய கடமையாகும். பருகூரிலிருந்து பங்களூருக்குக் கிருஷ்ணகிரி வழியாக ஒரு லாரி போகிறது. லாரியினுடைய எண் MYM 4281. உமாசங்கர் டிரான்ஸ்போர்ட்டைச் சேர்ந்த லாரி. அதை ஒட்டிச் சென்ற டிரைவரின் பெயர் அப்பு. அந்த லாரி போயிருக்கிறது. போகிற நேரத்தில் பருகூர் போலீஸ் ஸ்டேஷன் ஸப்-இன்ஸ்பெக்டர் லாரியை நிறுத்துகிறார். பங்களூரை நோக்கிப் போகிற லாரிறைய நிறுத்துகிறார். டிரைவருக்கும் அவருக்கும் வாக்குவாதம் நடைபெறுகிறது. அந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து டிரைவர் லாரியை ஓட்டிக்கொண்டு போய்விடுகிறார். உடனேயே இவர் இன்னொரு லாரியில் ஏறித் தொடர்ந்து பின்னால் போய் இருக்கிறார். அந்த லாரி டிரைவர் கிருஷ்ணகிரியில் லாரியை நிறுத்திவிட்டு டீ சாப்பிடப் போயிருந்த சமயம் இன்ஸ்பெக்டர் லாரியைப் பிடித்து அதில் ஏறிக்கொண்டு, அதை திரும்பவும் பருகூருக்குக் கொண்டு வருகிறார். இது அந்த லாரி டிரைவருக்குத் தெரியாமல் நடக்கிறது. வருகிற வழியில் எட்டு மைல் தொலைவில் இந்த லாரி விபத்துக்கு உள்ளாகிறது. இந்த விபத்து ஏற்பட்ட பிறகு, அந்த இன்ஸ்பெக்டர் அந்த லாரியின் முதலாளி சுப்பாராவ் என்பவருக்குத் தெரியப்படுத்தி, அவருடன் சமாதான முயற்சி செய்து கொண்டு 500 ரூபாய் ரொக்கமாகவும், மோகன்ராம் என்பவருக்கு 1,500 ரூபாய்க்குப் பாண்டு எழுதிக்கொடுத்து, அது சுப்பராவ் பெயரில் மேடோவரும் செய்யப்பட்டிருக்கிறது. கவர்ன்மெண்டு சர்வென்ட் தனிப்பட்டவர்களிடம் கடன் வாங்கக் கூடாது. அப்படி வாங்குவதாக இருந்தாலும் முன் கூட்டியே அனுமதி பெற்று வாங்க வேண்டும். இந்த வழக்கிலே குறிப்பிட்ட சப்-இன்ஸ்பெக்டர் அவர்கள் மோகன்ராமிடம் கடன் வாங்கி யிருப்பதாக பாண்டு தயாரிப்பதற்குமுன் அனுமதி வாங்கியிருக்கிறாரா