பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/553

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




552

-

காவல்துறை பற்றி

வரவில்லை என்று கருதுகிறேன். (குறுக்கீடு) (காய்ச்சலா ?) அவர்கள் - தங்கமணி என்பவர் காவல் துறையால் தாக்கப்பட்டதாக ஒரு செய்தியைச் சொன்னார். அவர் நேரிலேகூட அதுபற்றி என்னிடத்திலே விளக்கிச் சொன்னார். அதுபற்றி அப்போதே விசாரித்து, அதை நான் அலட்சியப்படுத்தாமல், அதுகுறித்து கோட்டாட்சியர் விசாரணையை மேற்கொள்ள கேட்டுக்கொண்டுள்ளேன். ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது. முழுத் தகவல்களும் வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரு. மணி அவர்களுக்கு நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.

பல வழக்குகளில் மேல்நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ஒரு பெரிய பட்டியலைப் போட்டுக் காட்டினார். அதைக் கேட்கும்போதும் அல்லது பத்திரிகையிலே படிக்கும்போதும் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், ஒவ்வொன்றிற்கும் என்னிடத்திலே விளக்கம் இருக்கிறது, பதில் இருக்கிறது.

குருந்தன்கோடு என்ற இடத்தில் ஸ்ரீமதி என்ற பெண்ணை செல்லப்பன் என்பவர் 30-3-1999 அன்று கற்பழிக்க முயன்றதாக, இரணியல் காவல் நிலையத்தில் குற்ற எண் 209/99, பிரிவுகள் 376 மற்றும் 511 இந்தியத் தண்டனைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையிலே உள்ளது என்பதை நான் அவருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். அதை நான் அலட்சியப் படுத்திவிடவில்லை.

அதேபோல், இன்னொன்று சொன்னார். ஆற்றூரில் குளோரிபாய் என்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக அதில் எதிரி சிவசிங்மீது திருவட்டாறு காவல் நிலையத்திலே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எதிரி, நீதிமன்றத்திலேயிருந்து கைது செய்யப்பட்டவர், பிணையில் வெளிவந்துள்ளார். வழக்கு இரசாயனப் பரிசோதனை அறிக்கைக்காக நிலுவையில் உள்ளது.

6-10-1998 அன்று கொளத்துமேடு சுதா என்ற மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக நிர்மலன் என்பவர்மீது அருமனைக் காவல் நிலையத்திலே வழக்கு. அந்த நிர்மலன் என்பவர் கைதாகியிருக்கின்றார்.