பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/556

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

555

கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட பெண்களின் குழந்தைகளுக்கு 10,000 ரூபாயும், வரதட்சனை கொடுமையினால் பாதிக்கப்பட்டு நிரந்தரமாக ஊனமுற்ற பெண்களுக்கு 5,000 ரூபாயும் நிவாரண உதவி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)

காவல் துறையிலே வாகன ஓட்டுநர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உள்ள ஊதியத்தோடு மாதந்தோறும் 90 ரூபாய் சிறப்பு ஊதியமாக அளிக்கப்பட்டு வருகிறது வாகன ஓட்டுநர்களுக்கு. இதை உயர்த்த வேண்டுமென்ற காவல் துறையினுடைய கோரிக்கையை ஏற்று, 90 ரூபாய் என்பதை இனி மாதந்தோறும் 120 ரூபாயாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. காவல் துறையில் பணியாற்றுகின்ற பணியாளர்களுக்கு வழங்கப்பட்டதுபோல் தீயணைப்புத் துறையில் பணியாற்றுகின்ற பணியாளர்களுக்கும், பணியில் அவர்கள் ஈடுபட்டிருக்கும்போது, காயமடைந்தாலோ, இறந்துவிட்டாலோ, குடும்ப நலத் திட்டத்திலே வழங்கப்படும் கருணைத் தொகை வீரமரணம் அடைவோருக்கு இதுவரை 10,000 ரூபாய் என்று இருந்தது. தீயணைப்புத் துறையில். அதை 2 இலட்சம் ரூபாயாக இப்போது உயர்த்த இருக்கின்றோம். (மேசையைத் தட்டும் ஒலி). செயல்பட முடியாத அளவிற்கு நிரந்தர ஊனம் அடைவோருக்கு இதுவரை 10,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாய் வரை என்று வழங்கப்பட்டதற்கு மாறாக, இனி 50,000 ரூபாய் வழங்கப்படும். படுகாயம் அடைவோருக்கு இதுவரை 1,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை என்றிருந்த தொகை 10,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. சாதாரண அளவிலே காயம் அடைவோருக்கு இதுவரை 1,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வழங்கப்பட்டதற்கு மாறாக, இனி 5,000 ரூபாய் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது.

கடந்த ஆட்சியில் 10,000 பேர் காவலர்களாக நியமனம் செய்யப்பட்டார்கள். ஆனால், நியமனம் செய்வதாக அறிவிக்கப்பட்டதே தவிர உரிய நியமன ஆணைகள் இதுவரை வெளியிடப்படவே இல்லை என்பது மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவருக்கும் மிக நன்றாகத் தெரியும். அந்த 10,000 பேரில், சில பேர் கொடுக்கின்ற கஷ்டங்களைத்தான் இன்றைக்கு இந்த அரசு அனுபவித்துக் கொண்டிருக்கிறது என்பதும் உங்களிலே