பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/563

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




562

காவல்துறை பற்றி

1996-97 இல், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 1649 கோடி ரூபாய் கிடைத்தது.

1997-98 இல் சில மாறுதல்களைச் செய்தோம். உங்களுக்குத் தெரியும். முன்பெல்லாம் மாதா மாதம் ஆறு கோடி ரூபாய் எங்கேயோ போய்க்கொண்டிருந்தது; தோட்டத்திற்குப் போய்க்கொண்டிருந்தது. பகிரங்கமாக இந்த அவையிலே சொன்ன விஷயம்தான். ஆனாலும், வரி கொடுப்பதற்குப் பதிலாக, அந்த வரி வேண்டாம் என்று சொல்லிவிட்டு, அந்த வரிக்குப் பதிலாக மாதந்தோறும் 6 கோடி ரூபாய் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். 12 x 6 = 72 கோடி ரூபாய் வருடத்திற்குக் கிடைத்துக் x 6 = கொண்டிருந்தது. 5 வருடத்திலே எத்தனை கோடி ரூபாய் ? 360 கோடி ரூபாய் போய்ச் சேர்ந்தது. அதைத் தடுத்து, அந்த வரியை அரசுக்குக் கொடுங்கள் என்று சொல்லி Vend Fee என்று அந்த வரிக்கும் பெயர் வைத்து, அந்த Vend Fee -ஐ வசூலித்து, இதை எங்கள் வீட்டிலே கொண்டு வந்து வைக்க வேண்டாம்; இதை கஜானாவிலேயே கொண்டு சேர்த்திடுங்கள் என்று சொன்னதன் பேரில் 1997-98இல் 1942 கோடி; 1998-99இல் 2697 கோடி இதன் மூலமாகக் கிடைக்கிறது. 39 சதவிகிதம் கூடுதலாக அரசுக்கு வருமானம் இப்போது வருகிறது. எனவே, இன்றுள்ள பற்றாக் குறையில் இந்த வருமானமும் நம்மைக் காப்பாற்றிக்கொண் டிருக்கிறது என்பதை நான் திரு. சொக்கர் போன்ற வருமானங் களைப்பற்றிக் கணக்கிடுகின்றவர்களுக்குத் தெரிவித்துக்கொள்ளக்

கடமைப்பட்டிருக்கின்றேன்.

அடுத்து, புதிய காவல் நிலையங்கள். (எல்லோரும் நிமிர்ந்து உட்காருவது எனக்குத் தெரிகிறது). எனக்குத் தெரிகிறது). அதிகமான காவல் நிலையங்களைத் தர முடியாததற்கு நிதிப் பற்றாக்குறை இருப்பதை மாண்புமிகு உறுப்பினர்கள் மிக நன்றாக அறிவீர்கள். ஆனாலும், இங்கே வந்து அமர்ந்த பிறகு, நான் பேசத் தொடங்குவதற்கு முன்பு கூட சிலபேர் பரிந்துரைகளைக் கொண்டுவந்து கொடுத்தார்கள். அந்தப் பரிந்துரைகள் முழுமையையும் ஏற்றுக்கொள்ள முடியாத தற்காக மன்னித்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.

இருந்தாலும் புதியதாக காவல் நிலையங்கள் 17 காவல் நிலையங்களை இன்றைக்கு நான் தெரிவிக்க விரும்புகின்றேன்.