பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/567

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




566

காவல்துறை பற்றி

குறைவான (Only five incidents) அழைப்பு கிடைத்த தீயணைப்பு நிலையங்கள் மட்டும் 184. 6 நிகழ்வுகளிலிருந்து 10 நிகழ்வு வரை அழைக்கப்பட்ட தீயணைப்பு நிலையங்களின் எண்ணிக்கை 66. எனவே, இந்த ஆண்டு புதிதாக தீயணைப்பு நிலையங்கள் என்பதற்குப் பதிலாக ஏற்கெனவே உள்ள தீயணைப்பு நிலையங்களுக்குப் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும். அப்படி வழங்கப்படுகின்றபோது, அரசு இடம் தயாராக உள்ள 33 இடங்கள் அதற்காகக் குறிக்கப்பட்டு இருக்கின்றன. அதில் 12 இடங்களுக்குக் கட்டடம் கட்ட, துறையே தீர்மானித்திருக்கின்றது. ஒரு கட்டடம் கட்ட 17 இலட்சம் ரூபாய் செலவாகும். இந்த 17 இலட்சம் ரூபாயில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எட்டரை இலட்சம் ரூபாயைத்தர அவர்கள் ஒத்துக்கொண்டால் மேலும் 12 தீயணைப்பு நிலையங்களுக்கு இந்த ஆண்டிலேயே 24 இடங்களில் தீயணைப்பு நிலையக் கட்டடங்கள் கட்டமுடியும். யார் யார் தயாராக இருக்கிறார்களோ அவர்கள் உள்துறைக்குத் தெரிவித்தால், அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, இந்த 33-ல் 24 நிலையங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுக் கட்டடங்கள் கிடைக்கும். அவர்களுக்கு ஒதுக்கியுள்ள பணத்தில் 8.5 இலட்சம் ரூபாய் செலவு செய்தால் கட்டடங்கள் கிடைக்கும். மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அடுத்த ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆகவே ஒழுங்காகக் கொடுத்தால் இதைப்பற்றியெல்லாம் யோசிக்கப்படும். (சிரிப்பு).

சுப்பராயன் இன்னொன்றைச் சொன்னார். உதவி ஆய்வாளர் தேர்வில் கலந்துகொண்டவர்களுடைய மதிப்பெண்களைத் தெரிவிப்பதைப்பற்றிச் சொன்னார். இந்த மதிப்பெண்களைத் தெரிவித்தால் என்ன; ஏன் தெரிவிக்கக் கூடாது என்று கேட்டார். அதைத் தெரிவிக்கக்கூடாது என்று அப்படி ஒன்றும் கட்டாயம் இல்லை. அப்படி ஒன்றும் அரசும் அதிலே பிடிவாதமாக இல்லை. ஏற்கெனவே இந்தத் தேர்வுக்கான குறைந்தபட்ச cut off marks மதிப்பெண்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இருந்தாலும், ஒவ்வொருவரும் பெற்ற மதிப்பெண்கள் எவ்வளவு என்பதை