568
காவல்துறை பற்றி
சொன்னார். அது தவறு. Departmental Enquiry போட்டு பூசிமெழுகப் பார்க்கிறீர்கள் என்று சொன்னார். பூசி மெழுகுகிற வேலை இந்த அரசுக்கு என்றைக்கும் இல்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி). அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக இதைப்பற்றிச் சொல்லும்போதெல்லாம் நான் பதில் அளித்திருக்கிறேன். அதைப்பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறேனே அல்லாமல் புகார் தவறு என நான் என்றைக்கும் கூறியதில்லை. ப்ளோட்டோ பம்புகளை அதிக விலை கொடுத்து வாங்கியதாகக் கூறினார். அவர் கூறும்போது எல்லோரும் எண்ணிக்கொண்டிருப்பது, இந்த ஆட்சியிலேதான் வாங்கிவிட்டார்கள் என்று. இது, 1996-க்கு முன்பு, இந்த ஆட்சி வருவதற்கு முன்பு நடந்த தவறு. அந்தப் பம்புகள் வாங்கியது சம்பந்தமாக இலஞ்ச ஒழிப்புத்துறை முறையாக விசாரணை நடத்திக்கொண்டு வருகிறது. Department விசாரணையல்ல, இலாக்கா விசாரணையல்ல, இலஞ்ச ஒழிப்புத் துறையை விசாரிக்கச் செய்து முறையாக விசாரணையை நடத்திக்கொண்டு வருகிறது. அந்தத் துறை 21-9-1998 அன்று அரசுக்கு அதுபற்றிய அறிக்கையை அளித்திருக்கிறது. அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட அரசு, ஜெயப்பெருமாள்மீது முறையான Regular case ஒன்றைப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க 21-10-1998 அன்று ஆணையும் பிறப்பித்துள்ளது. இந்த அதிகாரி ஏதோ எனக்கு வேண்டியவர் வேண்டியவருக்கு வேண்டியவர் என்று சொல்லியிருக்கிறார். இந்த வேண்டியவர் என்பது, அன்றைக்குக்கூட யாரோ பேசும்போது, வீரப்பன் வேண்டியவர் என்று சொன்னார். (குறுக்கீடு). அதே செல்லக் குமார்தான் அதையும் சொன்னார். தாங்கள்கூடப் பெருமனது வைத்து அதை எடுத்துவிட்டீர்கள். எடுத்திருக்க வேண்டியதில்லை. எனக்கு வேண்டியவர்தான் வீரப்பன். அதேபோல, நம்முடைய செல்லக்குமாரும் வேண்டியவர்தான்'. அவர் காவல் நிலையம் வேண்டுமென்று வேண்டிய காரணத்தினால்தான் 'வேண்டியவருக்கே' காவல் நிலையம் கொடுத்திருக்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி). அதைப்போல, வீரப்பனும் 'வேண்டியவர்தான்', 'நான் சரணாகதி அடைந்து விடுகிறேன், என்னை விடுதலை செய்துவிடுங்கள்' என்று 'வேண்டியவர்தான்'. அந்த வகையிலே 'வேண்டியவர்தான்',