பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/570

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

569

(மேசையைத் தட்டும் ஒலி). வேறு வகையிலே 'வேண்டியவரல்ல' என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

செல்லக்குமாருக்கு இந்த அதிகாரிமீது பழிகூற இந்த ஒரு புகார்தான் தெரியும் என்று கருதுகிறேன். இன்னும் பல புகார்கள் இருக்கின்றன இந்த அதிகாரிமீது. அவருக்குச் சொன்னவர் இந்த ஒரு புகாரைத்தான் சொல்லியிருக்கிறார். தெரிவிக்கப்படாத புகார் இன்னொன்று இருக்கிறது. அதையும்கூற விரும்புகிறேன்.

22-5-1998 அன்று சென்னை மூலக்கடையில் நடந்த பெரிய தீ விபத்தில் சர்டிஃபிகேட் வழங்குவதற்கு இந்த ஜெயப்பெருமாள் கையூட்டுக் கேட்டார் என்றும், இலஞ்சம் கேட்டார் என்றும், அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டுமென்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையிலிருந்து வந்த முதல்நிலை அறிக்கையை இந்த அரசு ஏற்றுக்கொண்டு, அவரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்திருக்கிறது. இலஞ்ச ஒழிப்புத் துறையின் விரிவான விசாரணைக்கும் இந்த அரசு உத்தரவிட்டிருக்கிறது என்பதை மாண்புமிகு உறுப்பினர் களுக்கெல்லாம் நான் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விசாரணை முடிவடைந்து அரசு தற்போது ஜெயப்பெருமாள்மீது மேலும் ஒரு முறையான வழக்கைப் பதிவு செய்து நடவடிக்கையை மேற்கொள்ள இலஞ்ச ஒழிப்புத் துறைக்கு 6-5-1999 அன்று உத்தரவிட்டிருக்கிறது.

இதைவிட இன்னொன்று, 12-11-1998 அன்று இந்த அதிகாரி ஜெயப்பெருமாள் வீட்டை விஜிலன்ஸ் துறை சோதனையிட்டது. அப்போது வரவுக்கு மீறிய சொத்துக்களைச் சேர்த்திருப்பதுபற்றி அங்கே தெரிந்தது. அவருடைய மனைவி, மகன், தாயார் மற்றும் பினாமிகள் பெயரில் ஜெயப்பெருமாள் வீட்டிலே 37 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும். 72 சவரன் நகைகளையும், 3 கார்களையும், ஒரு டெம்ப்போ ட்ரக் ஆகியவைகளையும் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதன்மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, ஜெயப்பெருமாள்மீது Vigilance enquiry மேற்கொள்ளப்படவில்லை என்றும் Departmental enquiry தான் வைக்கப்பட்டிருக்கிறது என்றும் சொன்னது உண்மைக்கு முற்றிலும் மாறான தகவல். Vigilance Enquiry மாத்திரமல்ல. அவர்மீது Criminal Action - னே எடுக்க இரண்டு நிகழ்வுகளில்