570
காவல்துறை பற்றி
இந்த அரசு ஆணையிட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்னொன்று சொன்னார், உபகரணங்கள் வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட தொகை அப்படியே போய்விட்டது என்று சொன்னார். இந்த அரசைப் பற்றியும், இந்த அரசைத் தலைமையேற்று நடத்துகிற என்னைப்பற்றியும் எதிரே அமர்ந்திருக்கிற நீங்கள் எல்லாம் நன்றாக அறிவீர்கள். இந்த உபகரணங்கள் வாங்குவதற்காக 1998-99ஆம் ஆண்டுக்கு அந்தத் துறைக்காக ஒதுக்கப்பட்டது 5.42 கோடி ரூபாய். அதில் ஏற்கெனவே செலவானது 2.5 கோடி ரூபாய். 1.86 கோடி ரூபாய்க்கு 13 நீர்தாங்கி வண்டிகள் வாங்கினால், தீயணைப்புத் துறைக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று ஜெயப்பெருமாளுக்குப் பிறகு வந்த அதிகாரி முடிவெடுத்து, அரசுக்குப் பிரேரணை அனுப்பியிருக்கிறார். அரசின் ஒப்புதல் கொடுத்தவுடன் இந்தத் தொகை செலவிடப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஜெயப்பெருமாள் இயக்குநராக இருந்தபோது, ஒப்பந்தப்புள்ளி கோராமல் உபகரணங்களை வாங்கலாம் என்று முன்மொழிந்த கருத்து கொள்முதல் குழுவால், Purchase Committee - யால் ஏற்கப்படவில்லை. ஆகவே, அவருக்குப் பின்வந்த இயக்குநர் ஒப்பந்தப்புள்ளி கோரி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ளதால் இந்த உபகரணங்கள் உடனடியாக வாங்கப்பட்டுவிடும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். மீதமுள்ள 1.05 கோடி ரூபாய்க்கு உபகரணங்கள் வாங்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு நடவடிக்கையும் எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
கேமரா ஒன்று வாங்கவில்லை என்று சொன்னார். 4-6-1998 அன்றே கேமரா வாங்குவதற்காக ஆணையை அரசு பிறப்பித்து விட்டது. ஆனால் கேமரா வாங்குவதற்காக அகில இந்திய அளவில் டெண்டர் கோரப்பட்டு யாரும் முறையாக டெண்டர் மனு செய்யாத காரணத்தால் கேமரா வாங்குவதிலே தாமதம் ஏற்பட்டுள்ளது. டெண்டர் இல்லாமல் கேமரா வாங்கினால் அடுத்த ஆண்டு, ஏன் டெண்டர் போடாமல் கேமரா வாங்கினீர்கள் என்ற கேள்வி எழக்கூடும். ஆகவேதான் டெண்டர் போடப்பட்டது. கேமராவி னுடைய விலை 3 இலட்சம் ரூபாய். அதை இயக்குகின்றவர் களுக்கு ஆகிற செலவு 2 இலட்சம் ரூபாய். மொத்தம் 5 இலட்சம்