பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/573

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




572

காவல்துறை பற்றி

குட்டிகள் மாண்டிருப்பார்கள் என்பதை எண்ணிப்பார்த்தால்தான் அந்தப் பயங்கரம் நமக்கு நன்றாகத் தெரியும். அந்த அளவிற்கு 'அல் உம்மா' என்கின்ற அந்த இயக்கத்தில் தீவிரமாக ஈடுபாடு கொண்டு செயல்பட்டு வந்த சிலபேர்மீதுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்னும் ஒன்று சொல்கிறேன்.

மேலப்பாளையத்தில் சர்வசமயக் கூட்டமைப்புச் செயலாளராகவும், சிறு வியாபாரிகளுடைய சங்கத் தலைவராகவும் இருந்த, 42 வயதேயான வின்சன்ட் அபுபக்கர் என்பவரை முஸ்லீம்களின் அடிப்படைவாத எண்ணங்கொண்ட குழுவினர் கிச்சான் என்ற புகாரி தலைமையில் 10-12-1997 அன்று கொலை செய்தார்கள். யாரை ? சர்வ சமய நோக்கம் கொண்டவர், 42 வயதானவர், ஒரு கூட்டமைப்பின் செயலாளர், எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்று போதிக்கக்கூடியவர். அவரை இந்த அடிப்படைவாத, மத எண்ணம் கொண்ட குழுவினர், கிச்சான் என்கிற புகாரி தலைமையில் 10-12-1997 அன்று கொலை செய்தார்கள். மத நல்லிணக்கத்திற்கு ஆதாரமாகவும், அமைதியைக் காக்க காவல் துறைக்கு உதவியாகவும் இருந்தவர் இவர்; இந்தக் கொலைக்குக் காரணமான 10 குற்றவாளிகளும் முஸ்லீம்கள், அதிலே 8 பேர் கைது செய்யப்பட்டார்கள். 4 பேர் ஜாமீனில் வெளிவந்துவிட்டார்கள். 2 பேர் இன்னும் தேடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். திரு. லத்தீப் அவர்கள் குறிப்பிட்ட 16 பேரைப் பற்றிய குறிப்பை இந்த அவைக்கு நான் படித்துக்காட்ட விரும்புகிறேன்.

டி. எம். சையது அலி - முக்கியத் தீவிரவாதியான கிச்சான் புகாரி என்பவருக்கு, அந்தப் பெரியவரைக் கொன்றாரே, அவருக்கு வலது கரம் போல் செயல்பட்டு, பண உதவி செய்தும், மறைவாகத் தங்க இடம் ஒதுக்கியும் கொடுத்தவர். பெருமாள்புரம் காவல் நிலையம் சம்பந்தப்பட்ட வெடி மருந்து வழக்கில் சம்பந்தப்பட்டவர்.

டி. எஸ். கே. அப்துல் கபூர் இவர் பெருமாள்புரம் வெடி மருந்து வழக்கிலே சம்பந்தப்பட்டவர். தன்வீட்டில் உள்ள தொலைபேசி மூலமாக 'அல் உம்மா' தீவிரவாதிகளுக்கு இரகசியத் தகவல்களைத் தெரிவிப்பவர்.