பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/574

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

573

அஜீஸ் என்பவர் மேலப்பாளையத்தில் உள்ள ராசி டெக்ஸ்டைல்ஸ் கடையிலிருந்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கைலிகளை தன் நண்பர்களுடன் சேர்ந்து திருடியவர். குண்டு வைக்கத் திட்டமிட்ட வழக்கு ஒன்றிலும் சம்பந்தப்பட்டவர்.

தமீம் அன்சாரி - இவரும் கொள்ளை வழக்கிலும், வெடி மருந்து வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்.

சாகுல் அமீது - இவர் தமீம் அன்சாரியோடு இணைந்து கொள்ளை வழக்கிலும், வெடி மருந்து வழக்கிலும் சம்பந்தப்

பட்டவர்.

சுலைமான் என்பவர் அடிக்கடி பாளையங்கோட்டையில் மத்தியச் சிறையில் உள்ள முக்கிய தீவிரவாதியான கிச்சான் புகாரியைச் சந்தித்து நாசவேலைகள் செய்வதற்கான அறிவுரைகளைப் பெற்று வெளியே உள்ளவர்களுக்குத் தகவல் கொடுப்பவர். வெடிகுண்டு வைக்க முயற்சி செய்த வழக்கு ஒன்றிலும் சம்பந்தப்பட்டவர்.

ஷேக் சையது அலி, முகமது பாதுஷா போன்றவர்களும் சுலைமானோடு இணைந்து செயல்பட்டவர்களாவர்.

அஜ்மீர் என்ற அப்துல் ரகுமான், பத்தமடை பாரதிய ஜனதா கட்சித் தலைவர் மாடசாமி கொலை வழக்கில் சம்பந்தப்

பட்டவர்.

ஷா அலம் தங்கள் என்பவர் வெடி குண்டு வைக்கத் திட்டமிட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவர்.

காஜா மொய்தீன் என்பவர் பீடித் தொழிலாளர்களுக்குப் பொங்கல் போனஸ் பட்டுவாடா செய்வதற்காகக் கொண்டு சென்ற 80 ஆயிரம் ரூபாயை 'அல் உம்மா' செலவிற்காகக் கொள்ளை யடித்தவர். இவர் முத்துக்குருஷ்ணன் என்பவர் கொலை செய்யப் பட்ட வழக்கிலும் குற்றவாளி ஆவார். தன் நண்பர்களோடு சேர்ந்து 'அல் உம்மா' இயக்கத்திற்காகத் தனது தந்தையான அகமது அலியிடமிருந்தே 80 ஆயிரம் ரூபாயைக் கொள்ளையடித்தவர்.

அகமது பஷீர் என்கின்ற நண்டு பஷீர், முத்துக்கிருஷ்ணன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர். கோவை குண்டு வெடிப்பு