574
காவல்துறை பற்றி
வழக்கிலும் சம்பந்தப்பட்டவர். இரயில் பாதையில் குண்டு வைத்த வழக்கிலும் சம்பந்தப்பட்டவர். இவ்வாறுதான், இந்த நபர்கள்மீது தகுந்த காரணங்களின்பேரில்தான் வழக்குப் போடப்பட்டுள்ளதே தவிர, ஏதோ எந்த உள்நோக்கத்துடனும் அல்ல.
இவர்களைக் கைது செய்தபோது இவர்களிடமிருந்து ஜெலட்டீன் குச்சிகளும், டெட்டனேட்டர்களும், நாட்டு வெடி குண்டுகளும், ஃப்யூஸ் வயர்களும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இந்த 16 பேரில், 13 பேர்மீதுதான் என். எஸ். ஏ., தேசியப் பாதுகாப்புச் சட்ட வழக்கு போடப்பட்டுள்ளது. என். எஸ். ஏ. பிரிவின்கீழ் திடீரென்று வழக்குப் போட்டுவிட முடியாது.
மாவட்ட ஆட்சியாளரோ, காவல் துறை ஆணையரோதான் ஆணை பிறப்பிக்க முடியும். ஆணை பிறப்பித்த 5 நாட்களுக்குள் தடுப்புக் காவல் கைதிகளுக்குக் காரணம் கூற வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர் பிறப்பித்த ஆணைக்கு மாநில அரசு 12 நாட்களுக்குள் ஒப்புதல் தர வேண்டும். மாநில அறிவுரைக் கழகத்தின் State Advisory Board முன் அனைத்து ஆவணங்களும் 21 நாட்களுக்குள் வைக்கப்பட்டாக வேண்டும். மாநில அறிவுரைக் கழகத்திலே உயர்நீதிமன்ற நீதிபதிகள் இடம்பெற்றிருக்கிறார்கள். மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் முறையீட்டு மனு செய்துகொள்ள அவர்களுக்கு உரிமையும் உண்டு. தடுப்புக் காவல் ஆணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலே 'ஹேபியஸ் கார்பஸ்' மனு தாக்கல் செய்யலாம்.
திரு. லத்தீப் அவர்கள் இங்கே குறிப்பிட்டவர்களில் மூன்று பேரை விடுவிக்க Advisory Board ஏற்கெனவே ஆலோசனை தந்து அதன் பேரில் அரசும் ஆணை வெளியிட்டுள்ளது. இதுமாத்திர மல்ல. திருநெல்வேலியிலே ஏதோ முஸ்லீம்கள்மீது மாத்திரம்தான் என். எஸ். ஏ. போட்டதாகச் சொல்வது தவறு. திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த வழக்கு ஒன்றில் 20 வயதேயான சித்திரக்குமார், 25 வயதான முத்து, மாயா என்கிற மாயாண்டி, 19 வயதான மாரியப்பன் ஆகியோர்மீதும் வெடிகுண்டுப் பிரிவுச் சட்டம் மற்றும் என். எஸ். ஏ. சட்டத்தின்கீழ், திருநெல்வேலி - ஈரோடு இடையே செல்லும் புகைவண்டியைக் கவிழ்ப்பதற்காக இருப்புப் பாதையில் வெடிகுண்டு வைத்த