பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/576

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

575

வழக்கிலே அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்துவா, முஸ்லீமா, கிருத்துவரா என்று பார்க்காமல் அவர்கள் எவ்வளவு பெரியவன்முறையில் ஈடுபட்டார்கள் என்கிற அந்த அடிப்படை யிலேதான் அவர்கள் மீது வழக்கு போடப்படுகிறதே தவிர, வேண்டுமென்றே ஒரு சமுதாயத்தின் வெறுப்பைத் தேடிக்கொள் வதற்கு இந்த அரசு ஒன்றும் விளையாட்டுப் பிள்ளை அல்ல என்பதை நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இன்னொன்று சொன்னார். வேலூர் மாவட்டத்திலே போலீஸ் எஸ்.பி.-யாக முஸ்லீமையே போடக்கூடாது என்று மரபு இருப்பதாக அவர்கள் தெரிவித்தார்கள். நான் அவருக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். என்னுடைய பாதுகாப்புப் பிரிவினுடைய முதன்மை அதிகாரியே ஜாபர் சேட்தான். பாதுகாப்பு அதிகாரி, என்னுடைய பாதுகாப்பு அதிகாரியினுடைய பெயரே, தலைமை அதிகாரி பெயரே ஜாபர் சேட். இஸ்லாமிய ஐ. பி. எஸ். அதிகாரிதான்.

N. S. A. போன்ற பிரிவுகளையெல்லாம் கையாளுகின்ற அரசினுடைய முக்கியச் செயலாளராக இன்று இருப்பவர் பரூக்கி என்ற இஸ்லாமிய ஐ. ஏ. எஸ். அதிகாரிதான்.

நான் 1989-ல் பதவியேற்றபோதுகூட புலனாய்வுத் துறைக்கு தலைமைப் பொறுப்பையே ஜாபர் அலி என்ற ஐ. பி. எஸ் அதிகாரியிடம்தான் கொடுத்திருந்தேன். நம்முடைய ஆளுநர் அவர்களே யார் என்று உங்களுக்குத் தெரியும்.

தமிழகத்திலே இரண்டு துணைவேந்தர்கள் இஸ்லாமியச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான். கோவை பல்கலைக்கழகத் திலும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் இஸ்லாமியர்தான் துணைவேந்தர்களாக இருக்கின்றார்கள். தமிழ்நாட்டிலே இந்த ஆட்சியிலே மூன்று முஸ்லீம் கலெக்டர்கள் இருக்கின்றார்கள்.

காவல் துறையிலே இஸ்லாமியர்கள் என்று பார்த்தால் 5 கண்காணிப்பாளர்கள், (எஸ். பி.-க்கள்) இருக்கின்றார்கள். 3 ஏ.டி.எஸ்.பி.-க்கள் இருக்கின்றார்கள். 16 டி.எஸ்.பி.-க்கள் இருக்கின்றார்கள். 132 ஆய்வாளர்கள் இருக்கின்றார்கள். 231 உதவி