பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/577

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




576

காவல்துறை பற்றி

ஆய்வாளர்கள் இருக்கின்றார்கள். 4217 காவலர்கள் இருக்கின்றார்கள். ஆக மொத்தம், 4604 பேர் காவல் துறையில் எஸ்.பி.-யாக, டி.எஸ்.பி.-யாக, ஏ.டி.எஸ்.பி.-யாக, ஆய்வாளர்களாக, உதவி ஆய்வாளர்களாக, காவலர்களாக இருக்கின்றார்கள். இது காவல் துறையினுடைய மொத்தப் பணியாளர்கள் எண்ணிக்கையில் 5.49 சதவிகிதம் என்பதையும் நான் மிகுந்த மரியாதையோடு தெரிவித்துக்கொள்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி).

கோவை வெடிகுண்டுச் சம்பவத்திலே ஏதோ ஒன்றுமே நடக்காதது மாதிரி நம்முடைய சுந்தரம் இங்கே பேசினார். அதற்கு தி. மு. க. தான் காரணம் அப்படியென்று சொன்னார். அதற்கு முன்னாடி ‘அ’ போட்டுக் கொண்டால் சரிதான். (மேசையைத் தட்டும் ஒலி) இந்த வெடிகுண்டுச் சம்பவத்திலே...

திரு.பி.

திரு. பி. ஆர். சுந்தரம் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே. . . (குறுக்கீடுகள்).

மாண்புமிகு பேரவைத் தலைவர் : அமைதியாக இருக்க வேண்டும். (குறுக்கீடு) நீங்கள் பேசினீர்கள். பதிலுக்குப் பேசுகின்றார்கள். அவ்வளவுதான், வேறு ஒன்றுமில்லை. (குறுக்கீடுகள்) உறுப்பினர்கள் அமைதிகாக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். உட்காருங்கள்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : கோவை சம்பவத்தில் மொத்தக் குற்றவாளிகள் 195 பேர், கைது செய்யப்பட்டவர்கள் 178 பேர். கைது செய்வதற்கு முன்பே இறந்து போனவர்கள், கைது செய்திருக்கின்ற கட்டத்திலே சந்திரசேகரன் எல்லாம் சொன்னீர்களே அதுமாதிரி நிலைமையின் காரணமாக இறந்து போனவர்கள் 8 பேர், தலைமறைவு 9 பேர். மொத்த வழக்குகளுடைய எண்ணிக்கை 44. இவற்றில் 41 வழக்குகளின்மீது கோவை ஐந்தாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாகிவிட்டது. சிறப்பு நீதிமன்றத் திற்கான அறிவிக்கை அரசு சார்பிலே வெளியிட்டபோதிலும் இன்னும் உயர்நீதிமன்றம், நீதிபதியினுடைய பெயரை அறிவிக்க வில்லை. அதற்காக ஒரு சிறப்பு நீதிமன்றத்தை அரசு அறிவிக்கை செய்திருக்கிறது. யார் நீதிபதி என்பதை இன்னும் உயர்நீதிமன்றம் அறிவிக்கவில்லை. அதுதான் தாமதம். இருந்தாலும்கூட,