பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/578

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

577

44 வழக்குகளில் மொத்தம், 41 வழக்குகள் குற்றப்பத்திரிகை ஓராண்டு காலத்திற்குள்ளே விரைவாக தாக்கல் செய்த இந்த ஆட்சியைப் பாராட்டாதவர்கள் யாரும் இருக்க முடியாது. (மேசையைத் தட்டும் ஒலி). இதைப்பற்றி விசாரிப்பதற்காக. .

திரு. பி. ஆர். சுந்தரம் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே...

மாண்புமிகு பேரவைத் தலைவர் : நீங்கள் உட்காருங்கள். நான் கடைசியாக அனுமதிக்கிறேன். (குறுக்கீடு). இப்போது அனுமதிக்க முடியாது, உட்காருங்கள்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : அதைப்பற்றி விசாரிப்பதற்கு நீதியரசர் கோகுல கிருஷ்ணன் அவர்களை நியமித்து இரண்டு கட்டமாக விசாரிக்கச் சொன்னோம். 1997 நவம்பர் கடைசி காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி குறித்தும், அதற்கு அடுத்து, 1998 பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெற்ற குண்டு வெடிப்பு குறித்தும் விசாரணைக் கமிஷன் இரண்டையும் விசாரிக்கச் சொல்லி நீதியரசர் கோகுல கிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அவர் இரண்டையும் விசாரிப்பதாக இருந்தாலும்கூட, இரண்டையும் விசாரித்து முழுமையாக அறிக்கை தருவதற்குக் காலதாமதம் ஆகும் என்பதற்காகத்தான் அவர்கள் முதல் நிகழ்ச்சி பற்றிய முழு அறிக்கையை ஏற்கெனவே தந்து, அதை இந்த அவையிலே வைத்து இருக்கின்றோம். அதற்குப் பிறகு, நஷ்டயீடு கேட்டவர்கள் யார் யார், அந்தத் தகவலைத் தருவதற்குச் சில பேர் அவரை அவசரப்படுத்தி இருக்கிறார்கள். காரணம் என்னவென்றால், இலட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டமடைந்தவர்கள்; கொஞ்சம் வசதி படைத்தவர்கள், வசதியற்ற சாதாரண சிறு வியாபாரிகள் எல்லாம், தங்களுக்கு ஏற்கெனவே இடைக்கால நிவாரணம் அளிக்கப்பட்டு இருந்தாலும், மீதமுள்ள தொகை வேண்டும் என்பதற்காக அவசரப்படுத்தி விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது நீதியரசர் கோகுல கிருஷ்ணன் அவர்களிடத்தில் நஷ்டயீடு கோரி கொடுக்கப்பட்ட மொத்த மனுக்களின் எண்ணிக்கை 933 என்றாலும் முதற்கட்டமாக 560 மனுக்களைப் பரிசீலனை செய்து நஷ்டயீடு தருமாறு அரசுக்கு அவர் சிபாரிசு செய்து இருக்கிறார். முதல் கட்டப் பரிசீலனை 560. அதிலே இஸ்லாமிய மக்கள் 363 பேர்,