பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/581

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




580

காவல்துறை பற்றி

இயலாது. (மேசையைத் தட்டும் ஒலி) ஆனால், இப்போது நான் சொல்லிக்கொள்கிறேன், ஏனென்றால், நிதியொதுக்கீடு தீர்மானத்திலே பேசுகிற வாய்ப்பிருந்தாலும்கூட, இடையிலே சொல்லிவிட வேண்டுமென்று கருதுகின்றேன்.

நாம், இந்தச் சட்டமன்றத்தைப் பொறுத்தவரையில், சகோதரர்களாகப் பழகிக்கொண்டிருக்கிறோம். இணை பிரியாத தோழர்களாகப் பழகிக்கொண்டிருக்கிறோம். சட்டமன்ற உறுப்பினர்களுடைய கட்சி என்கின்ற அளவிலே நாமெல்லாம் ஒரே கட்சிதான். இதுவரையிலும் நாம் கட்டிக்காத்து வந்த அமைதி சட்டமன்றத்தினுடைய மாண்பு, பெருமை, கௌரவம், இவையெல்லாம் நமக்கிடையே ஏற்பட்டுவிட்ட நட்பு, இனம் தெரியாத தோழமை, ஒரு சகோதர உணர்ச்சி, இவையெல்லாம் தொடர்ந்து கட்டிக்காப்பாற்றப்பட வேண்டும். அதற்காக என்றென்றும் உங்களுக்குத் துணையாக இருப்பேன் என்பதையும் (மேசையைத் தட்டும் ஒலி) இந்த நேரத்திலே நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

தேர்தல் நேரத்திலே தமிழகத்திலே வேறு சம்பவங்கள் நிகழலாம். எதிர்பார்க்கிறேன். கோவையைப்போல அல்லது ஓசூரில் நடைபெற்றதைப்போல கள்ளச்சாராய விபத்து நடைபெறலாம். கோவையைப் போன்று ஒரு சம்பவம் நடைபெறலாம். அல்லது முகவையைப்போல, அந்த மாவட்டத்தைப்போல ஒரு சாதிக் கலவரம் தூண்டிவிடப்படலாம். அதற்கெல்லாம் போலீஸ் எச்சரிக்கையாக, தயாராக இருக்கிறது. தயாராக இருக்கும். அப்படி இருப்பதற்குத் தேர்தல் அல்ல பிரதானம், வெற்றி அல்ல பிரதானம். நம் நாட்டின் அமைதியும், சமுதாயத்தினுடைய நிலையும்தான் முக்கியம் என்பதை உணர்ந்து அனைவரும் காவல் துறையில் சிறுசிறு குறைகள் இருந்தாலும்கூட, அவற்றை நீக்கிக்கொள்வதற்கான எல்லா முயற்சிகளையும் அவர்களும் எடுப்பார்கள், நானும் அதற்குத் தூண்டுகோலாக இருப்பேன் என்று கூறி, இந்த அளவில் என்னுடைய உரையை நிறைவு செய்கின்றேன். வணக்கம்.