கலைஞரின் சட்டமன்ற உரைகள்
581
உரை : 20
நாள் : 15.05.2000
கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, காவல் துறை மற்றும் அதன் தொடர்பான துறைகள் குறித்து இரண்டு நாட்களாக எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட 19 பேர் உரையாற்றி, நான் என்னுடைய விளக்கத்தைக் கூறுகின்ற வாய்ப்பைப் பெற்று இந்த அவையில் சில கருத்துக்களை எடுத்துக் கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன். முதலில் நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தீயணைப்புத் துறைக்கு - காவல் துறைக்கு ஒரு Computer 80,000 ரூபாய்க்கு வாங்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டு.
திரு. சோ. பாலகிருஷ்ணன் : காவல் துறைக்கு கணினி. மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : காவல் துறையிலே கணினி, அதுதான் Computer என்று சொன்னேன்.
திரு. சோ. பாலகிருஷ்ணன் ருஷ்ணன் : தீயணைப்புத் துறை அல்ல, காவல் துறை.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : ஆமாம். காவல் துறைக்கு வாங்கப்பட்டிருப்பதாகச் சொல்லி, இது அதிக விலை என்று குறிப்பிட்டார்கள். ஏனென்றால் தலைப்புச் செய்தியாக அதுதான் வரும் என்ற காரணத்தால் அதைப் பற்றிய விளக்கத்தை முதலிலேயே கொடுத்துவிட நான் விரும்புகிறேன். 80,000 ரூபாய்க்கு வாங்கப்பட்டது பிரதான Computer மாத்திரம் அல்ல. Computer, அத்துடன் இணைந்த Printer, Modem-Network-தொடர்பு,, பெரிய Computer Server-கள். UPS ஆகிய Computer உள்ளிட்ட இந்த 6 item-களும் சேர்ந்துதான் 80,000 ரூபாய்க்கு வாங்கப் பட்டிருக்கிறது. எனவே அது ஒன்றும் அதிக விலை அல்ல. Computer மாத்திரம் வாங்கியிருந்தால், கணினி மாத்திரம் வாங்கி